என் மலர்

    சினிமா

    பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு: போலீஸ் காவல் நீட்டிப்பு
    X

    பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு: போலீஸ் காவல் நீட்டிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை அங்கமாலி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மேலும் ஒரு நாள் போலீஸ் காவலை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.
    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கடந்த 10-ந்தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    திலீப்பை போலீ சார் உடனடியாக அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டது.

    இதையடுத்து அவர் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். திலீப்புக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் அளிக்க வேண்டுமென போலீசார் அங்கமாலி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் 2 நாள் மட்டும் திலீப்பை விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். திலீப்புக்கு ஜாமீன் கேட்டு போடப்பட்ட மனுவையும் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.



    போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டதும் திலீப்பை போலீசார் நேற்று முன்தினம் திருச்சூரில் உள்ள ஜாய்ஸ் பேலஸ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இங்குதான் கடத்தலுக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்பட்டது. அங்கு திலீப் சென்றது, அவரை சந்தித்தவர்கள் குறித்து சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டன.

    அருகில் உள்ள இன்னொரு ஓட்டல் மற்றும் டென்னிஸ் அகாடமிக்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்குள்ள ஊழியர்களிடம் திலீப் குறித்த சாட்சியங்களை சேகரித்தனர். டென்னிஸ் அகாடமியில் எடுக்கப்பட்ட செல்பிமூலம்தான் பல்சர் சுனில் - திலீப் தொடர்பை போலீசார் அம்பலப்படுத்தினர். 2 நாட்களும் பகலில் பல்வேறு இடங்களுக்கு திலீப்பை அழைத்துச் சென்று சாட்சியங்களை சேகரித்த போலீசார் இரவில் விசாரணை நடத்தினர்.

    இன்று காலை 11 மணியுடன் திலீப்பின் 2 நாள் போலீஸ் காவல் முடிவடைந்தது. எனவே ஆலுவா போலீசார் இன்று காலை அங்கமாலி கோர்ட்டில் திலீப்பை ஆஜர்படுத்தினர்.



    அப்போது திலீப்புக்கு ஜாமீன் வழங்கக்கேட்டு அவரது வக்கீல் ராம்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது திலீப்புக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணை முடிவடையாததால் போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செயயப்பட்டது. இதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.

    நடிகர் திலீப்பை மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரித்து கொள்ளலாம். நாளை மாலை 5 மணிக்கு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டார்.

    திலீப்புக்கு போலீஸ் காவல் அளிக்கப்பட்டதால் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. நாளை மீண்டும் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் போது மீண்டும் அவருக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய திலீப்பின் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.



    போலீஸ் காவல் நீட்டிக் கப்பட்டதால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்பை போலீசார் உடனடியாக ஆலுவா போலீஸ் கிளப்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் மீண்டும் திருச்சூர் மற்றும் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிகிறது.

    திலீப்பின் மானேஜர் அப்புண்ணிக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அவரை போலீசில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் கூறி இருந்தனர்.

    ஆனால் அவர், தலைமறைவாகிவிட்டார். அவரைகண்டுபிடித்து கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×