என் மலர்

    சினிமா

    கேளிக்கை வரி பிரச்சினையில் நல்ல தீர்வு ஏற்படும்: விஷால் பேட்டி
    X

    கேளிக்கை வரி பிரச்சினையில் நல்ல தீர்வு ஏற்படும்: விஷால் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேளிக்கை வரி பிரச்சினையில் நல்ல தீர்வு ஏற்படும் என்று அரசு குழுவினரை சந்தித்த பின்னர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
    சினிமா டிக்கெட்களுக்கு மத்திய அரசு 28 சதவிதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. தமிழக அரசும் 30 சதவிதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இந்த இரட்டை வரிவிதிப்பை ஏற்க முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கேளிக்கை வரியை ரத்து செய்ய வற்புறுத்தி தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு தரப்பிலும் திரையுலகினர் தரப்பிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து தியேட்டர்களை மூடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    திரையுலகினர் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால், அபிராமி ராமநாதன், ஆர்.கே.செல்வமணி, திருப்பூர் சுப்ரமணியம், அருள்பதி, கதிரேசன், எஸ்.ஆர்.பிரபு, கல்யாண், எல்.சுரேஷ் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினரை சந்தித்து பேசினார்கள். இதில் அனைத்து அரசு துறை செயலாளர்களும் கலந்துகொண்டனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று திரையுலகினர் சார்பில் வற்புறுத்தப்பட்டது.



    இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சினிமாத்துறை இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. சினிமா மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இது பெரிய சுமை. எனவே கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகளிடம் வற்புறுத்தினோம்.

    எங்கள் கோரிக்கையை அரசு ஏற்று சினிமா வளர்ச்சிக்கு ஆவன செய்யும் என்று நம்புகிறோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்தகட்டமாக 24-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது நல்ல தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு விஷால் கூறினார்.

    ஆர்.கே.செல்வமணி கூறுகையில், “கேளிக்கை வரி தியேட்டர் கட்டணம், திரையரங்குகளை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்”, என்றார்.
    Next Story
    ×