என் மலர்

    சினிமா

    சினிமா தியேட்டர்களில் ‘காம்போ’என்ற பெயரில் வசூல்வேட்டை
    X

    சினிமா தியேட்டர்களில் ‘காம்போ’என்ற பெயரில் வசூல்வேட்டை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சினிமா தியேட்டர்களில் நீடிக்கும் பார்க்கிங் கட்டணம் பாப்கான், குளிர்பானம் விலைகள் குறையவில்லை ‘காம்போ’ என்ற பெயரில் ரூ.350 வசூல் வேட்டை நடைபெறுகிறது
    சினிமா டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்ற செய்தி வெளியானதில் இருந்து சினிமாத்துறையினரும், தியேட்டர் உரிமையாளர்களும் கொதித்து எழுந்துவிட்டனர்.

    ஜி.எஸ்.டி வரி 28 சதவீதம் என்று முதலில் அறிவிப்பு வெளியானது. திரைஉலகினர் எதிர்ப்பதையடுத்து ரூ.100க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீதம் வரி ரூ 100க்கு அதிகமான டிக்கெட்டுக்கு தான் 28 சதவீத வரி என்று மத்திய அரசு மாற்றி அமைத்தது.

    இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் 30 சதவீத வரியை வசூலிக்கலாம் என்று சட்டம் இயற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. பேச்சு வார்த்தைக்குப்பிறகு 30 சதவீத வரி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது பற்றி முடிவு செய்ய இருதரப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுசெயலாளருமான விஷால்,“ தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ.30 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் ஆன்லைன் முன் பதிவு கட்டணத்தை ரூ. 10 ஆக குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    ஒருதிரைப்பட விழாவில் பேசிய விஷால், “ தியேட்டர்களில் தின்பண்டம் விலை, வாகன நிறுத்த கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. இதை குறைத்தாலே தியேட்டர்களுக்கு கூட்டம் அதிகம் வரும். சினிமா தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகை கிடைக்க வழி ஏற்படும். எனவே, தியேட்டர்களில் தின்பண்டம் மற்ற  விலைகளை குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

    ஆனால் சினிமா தியேட்டர்கள் இதை கண்டு கொள்ளவில்லை. ரூ.120 மதிப்புள்ள சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணம் ரூ.120, ஜி.எஸ்.டி. 28 சதவீதம் ,ஆன்லைன் கட்டணம் ரூ.30 சேர்த்து ஒரு டிக்கெட் விலை 183 ரூபாய் 60 காசு ஆகிறது. எனவே ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை ரூ.80 ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால்
    டிக்கெட்டுக்கு ரூ. 20 குறையும். ஆனால் இது வரை ஆன்லைன் கட்டணம் குறைக்கப்படவில்லை.



    இது தவிரபெரிய தியேட்டர்களில் ‘காம்போ’ என்ற பெயரில் பாப்கான், குளிர்பான பாட்டில் ஆகியவற்றுக்கு ரூ. 350 வசூலிக்கப்படுகிறது. இது தவிர குடிநீர் பாட்டில் மற்றும் தின்பண்டங்களுக்கு குறைந்தது ரூ.200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சாதாரண இரு சக்கர வாகனத்தில் படம் பார்க்க செல்லும் ஒருவரிடம் 1 மணி நேரத்துக்கு வாகன நிறுத்த கட்டணமாக ரூ. 20 வசூலிக்கபடுகிறது. கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ 50 வசூலிக்கப்படுகிறது. இதன்படிபார்த்தால் ஒருவர் ஒரு சினிமா பார்த்து விட்டு வர 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகும். இதில் வாகன கட்டணமாக மட்டும் ரூ. 80 முதல் ரூ. 200 வரை கொடுக்க வேண்டியது இருக்கிறது.

    தனியாக ஒருவர் படம் பார்க்க வந்தால் கூட குறைந்தது ரூ. 500 செலவு செய்ய வேண்டியது இருக்கிறது. குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீரை கூட தியேட்டருக்குள் கொண்டு செல்லவிடுவது இல்லை. ஒரு குடும்பத்தில் 4 பேர் சினிமா பார்க்கச் சென்றால் குறைந்தது ரூ. 2ஆயிரம் வரை செலவு ஆகியது. இதனால் தான் பெரும்பாலானோர் சினிமா பார்க்க தியேட்டர் செல்ல முடியாத நிலை உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    அரசு 30 சதவீத வரிவிதித்தால் டிக்கெட் விலை உயரும் என்று எதிர்ப்பு தெரிவித்த, தியேட்டர் உரிமையாளர்கள், பாப் கான், குளிர்பானம், .குடிநீர் பாட்டில் விலை, வாகன நிறுத்த கட்டணம் ஆன்லைன் டிக்கெட் பதிவு கட்டணம் ஆகியவற்றை குறைக்காதது ஏன்? என்று பட தயாரிப்பாளர் தரப்பில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    அரசின் 30 சதவீத வரி விதிப்பு அதிகம் தான். என்றாலும். தியேட்டரில் தின்பண்டம் மற்ற விலைகளை குறைத்தால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் தமிழ்நாட்டில் 1,100 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கள் 30 கிராம பகுதி தியேட்டர்களை விட நகர தியேட்டர்களில் தான் தின்பண்டம் முதல் வாகன நிறுத்தம் வரை பலமடங்கு வசூலிக்கப்படுகிறது.

    இதை உடனே குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. எனவே பட தயாரிப்பாளர்கள் முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
    Next Story
    ×