என் மலர்

    சினிமா

    `கபாலி செல்வா இயக்கத்தில் ரஜினிகாந்த் படம்
    X

    `கபாலி' செல்வா இயக்கத்தில் ரஜினிகாந்த் படம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `கபாலி' படத்தில் நடித்ததன் மூலம் கபாலி செல்வா என்று அழைக்கப்படும் இயக்குநரும், ரஜினியின் தீவிர ரசிகனுமான செல்வா தனது அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்கியிருக்கிறார்.
    நடிகர் செல்வா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தி இருக்கிறார். பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ள இவர் `கோல்மால்' படத்தின் மூலம் இயக்குநராக தமிழிலில் அறிமுகமாகியிருக்கிறார்.  

    நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம், `12.12.1950'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை குறிப்பிடும் இந்த தலைப்பு ஒரு தீவிர ரஜினி ரசிகனை பற்றிய கதை என்று செல்வா கூறியிருக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்திகேயன் நேற்று வெளியிட்டார். இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.


    இதுகுறித்து செல்வா கூறுகையில்,

    இந்த படத்தின் தலைப்பு அவருடைய சாதனை, பிறந்தநாளை மட்டுமின்றி, அவரது பிறப்பையே கொண்டாடும் ஒரு தீவிர ரசிகனை பற்றிய கதை. அவரது புகழும், சாதனையும், என்னை போன்ற ரசிகர்களுக்கு மிக பெரிய உந்துதல் ஆகும். `12.12.1950' அந்த  மாமனிதனுடன், அவரது சாமானிய ரசிகனுக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை.

    அவருடைய பஞ்ச் வசனங்கள் எதையும் பயன்படுத்தாமல், தான் தெய்வமாக கருதும் சூப்பர் ஸ்டாரின் படம் வெளிவரும் நாள் ஒரு ரசிகனுக்கு பண்டிகை போன்றது. அத்தகைய நாளில் அந்த படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஒரு ரசிகனுக்கு ஏற்படுகிறது. அது என்ன, அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை நகைச்சுவை கலந்து உணர்வுப்பூர்வமாக சொல்லி இருப்பதாக கூறினார்.

    ரஜினியின் தீவிர ரசிகனாக செல்வா நடிக்க, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஜான் விஜய், பொன்னம்பலம், ரமேஷ் திலக், ஆதவன், அஜய், சாமிநாதன், ரிஷா, ஷபி, அஸ்வினி சந்திரசேகர், பிரஷாந்த், மற்றும் பலர் நடிக்க இளம் இசையமைப்பாளர்கள் ஆதித்யா - சூர்யா இசை அமைக்க, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்ய, விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவில், ஜ்யோஸ்டார் என்டர்டெயின்ட்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் கோடீஸ்வர ராஜு  தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

    போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் 72% காமெடி, 28 % GST ( Ganster, comedy and Thriller) என்று செல்வா கூறினார்.
    Next Story
    ×