என் மலர்

    சினிமா

    கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்
    X

    கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்த கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு நடிகர் விஷால் நன்றி கடிதம் அனுப்பியுள்ளார்.
    நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நாம் அனைவருமே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். பிறந்த இடத்தாலோ வாழும் மாநிலத்தாலே பேசும் மொழியாலோ வேறுபட்டாலும் இந்திய நாட்டின் பிள்ளைகளாக ஒன்றுபடுகிறோம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நீர்பாசன ஆண்டான கணக்கிடப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதில் ஜுன் மாதம் 10.16 டிஎம்சி தண்ணீரும், ஜுலை மாதம் 42.76 டிஎம்சி, ஆகஸ்ட் 54.72 டிஎம்சி, செப்டம்பர் 29.36 டிஎம்சி, அக்டோபர் 30.17 டிஎம்சி, நவம்பர் 16.05 டிஎம்சி, டிசம்பர் 10.37 டிஎம்சி, ஜனவரி 2.51 டிஎம்சி, பிப்ரவரி 2.17 டிஎம்சி, மார்ச் 2.4 டிஎம்சி, ஏப்ரல் 2.32 டிஎம்சி, மே மாதம் 2.01 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.



    தமிழ்நாடு இப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. விளைவு சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் மடிந்தனர்.

    வழக்கமாக ஜுன் 12-ஆம் தேதி திறந்துவிடப்படும் காவிரி அணை இன்னும் திறக்கப்படவில்லையே.. இந்த ஆண்டும் விவசாயம் செய்ய முடியாதோ என்று வருத்தத்தில் இருந்தனர் விவசாயிகள். கடந்த வியாழன் அன்று இதனை மனதில் கொண்டே கர்நாடகாவில் ஒரு படவிழாவில் பேசினேன். தமிழகத்துக்கு கர்நாடக தண்ணீர் தரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன்.

    நேற்று நீங்கள் அடுத்த மூன்று மாதங்களில் 94 டிஎம்சி நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் என அறிவித்திருக்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவது அவசியம் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த அறிவிப்புகளுக்காக நானும் எங்கள் மாநில மக்களும் தங்களுக்கு மனதார நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். தாங்கள் செய்திருப்பது அரசியலைத் தாண்டிய மனிதாபிமான செயல். எனது வேண்டுகோளை ஏற்று சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட தங்களை நான் தனிப்பட்ட முறையில் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×