என் மலர்

    சினிமா

    அனுமதியில்லாமல் பேட்டி: ரஜினி தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி திடீர் நீக்கம்
    X

    அனுமதியில்லாமல் பேட்டி: ரஜினி தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி திடீர் நீக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அனுமதியில்லாமல் பேட்டியளித்ததாக ரஜினி தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினி தனது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் முன்னிலையில் அவர் பேசும்போது, விரைவில் அரசியலுக்குள் வருவதுபோல் அவரது பேச்சு அமைந்திருந்தது. இதனால், கூடிய விரைவில் அவர் அரசியலுக்குள் வருவார் என்று அவரது ரசிகர்கள் எண்ணிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், ரஜினி அரசியலுக்குள் வருவதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்புகளும் கிளம்பின. ரஜினிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. ரஜினி ரசிகர்களும் பதிலுக்கு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ரஜினி திடீரென தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி கொடுக்கக்கூடாது என்றும், மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.



    ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்துகொண்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு வழங்கியிருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் தலைமை மன்ற நிர்வாகி சுதாகர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவது யாதெனில் நமது மன்ற கட்டுப்பாட்டிற்கும் ஒழுக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சைதை G.ரவியை மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தகுதியிலிருந்தும் நீக்குகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இனிவரும் காலங்களில் அவருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொலைபேசி வாயிலாகவோ, மற்றவர் மூலமாகவோ தொடர்புகொள்ள கூடாது என்றும், இதையும் மீறி யாராவது அவருடன் தொடர்புகொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொண்டு, மற்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் மன்றத் தலைமையில் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை, தொலைக்காட்சிகள் பேட்டி மற்றும் பொது விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தவிர்த்து, ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×