என் மலர்

    சினிமா

    படம் எடுக்கும் போது ரஜினி காலில் விழ ரசிகர்களுக்கு தடை
    X

    படம் எடுக்கும் போது ரஜினி காலில் விழ ரசிகர்களுக்கு தடை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை கோடம்பாக்கம் ராகேவேந்திரா மண்டபத்தில் நடைபெற்று வரும், புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின் போது ரஜினி காலில் விழ ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    படம் எடுக்கும் போது ரசிகர்கள் ரஜினி காலில் விழக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின்பு ரசிகர்களை சந்தித்து வருகிறார் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமணமண்டபத்தில் கடந்த 15- ந்தேதி ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

    அப்போது ரசிகர்களை குடும்பம் குடும்பமாக வரவழைத்து தனது அருகில் வைத்து அவர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக் கொண்டார். தொடக்க நாளில் ரஜினிகாந்த் அரசியல் பற்றி பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டார்.

    நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள், ரசிகர்களில் ஒரு பகுதியினரும் விரும்புகிறார்கள், 25 வருடத்துக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவாக பேசியதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் அடைந்தனர். பணம் சம்பாதிக்க பயன்படுத்திக் கொண்டனர். அதுபோல் பணம் சம்பாதிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆண்டவன் என்ன நினைக் கிறானோ அதன் படி நடப்பேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.



    ரஜினியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிக்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்களும் சமூக வளைதளங்களில் கருத்துக்கள் தெரிவித்து தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    ஆனால் ரஜினிகாந்த் தனக்கு ஆதரவான கருத்தையோ, எதிர்கருத்தையோ எதையும் கண்டு கொள்ளாமல் வழக்கமான சுரு சுருப்புடன் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

    3-வது நாளான நேற்று திருவண்ணாமலை, விழுப்புரம் சிவகங்கை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். நேற்றைய சந்திப்பில் சுமார் 600 ரசிகர்களுடன் ரஜினிகாந்த் போட்டோ எடுத்துக்கொண்டார்.



    வழக்கத்தை விட நேற்று ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்யாண மண்டபம் அமைந்துள்ள சாலை முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்றைய நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் பலரும் அவருடைய காலில் விழுந்தனர். மேலும் அவருடைய கையை இழுத்து தங்களுடைய தோளில் போட்டுக் கொண்டு போட்டோ எடுத்தனர்.

    தொடர்ச்சியாக இது போல் ரசிகர்கள் நடந்து கொண்டதால், “ரசிகர்கள் ரஜினி காலில் விழக்கூடாது, கையை இழுத்து தோளில் போட்டுக் கொள்ளக்கூடாது. அவர் கையை தோளில் போட்டுக்கொள்வது மாதிரி உட்கார்ந்தால் அவரே கையை போட்டுக்கொள்வார் என்று மைக்கில் அறிவிக்கப்பட்டது. இதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தனர்.

    இன்று 4-வது நாளாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார். இதற்காக காலை 9 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்தார். அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ரசிகர்களைப்  பார்த்து கை அசைத்தவாறு காரைவிட்டு இறங்கி உள்ளே சென்றார்.



    ரஜினியைப்பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோ‌ஷம் எழுப்பினார்கள்.

    கடந்த 3 நாட்களாக 500, 600 ரசிகர்களை மட்டுமே சந்தித்த ரஜினிகாந்த் இன்று 1000 ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    இன்று கடலூர், தஞ்சை மாவட்டம் மற்றம் காரைக்கால், புதுச்சேரி ரசிகர்கள் கலந்து கொண்டு ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

    19-ந் தேதிவரை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கிறார். இறுதி நாளன்று பரபரப்பு அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    Next Story
    ×