என் மலர்

    சினிமா

    `பாகுபலி 2 படத்திற்காக புதிய தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் திரையரங்கம்
    X

    `பாகுபலி 2' படத்திற்காக புதிய தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் திரையரங்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `பாகுபலி 2' படத்திற்காக சென்னையின் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்று புதிய தொழில்நுட்பத்துடன் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. அது எந்த திரையரங்கம் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சென்னையில் உள்ள பிரபல "காசி திரையரங்கம்" தல அஜித்தின் `விவேகம்' படத்திற்காக புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அதேபோல் `பாகுபலி 2' படத்திற்காக சென்னையின் உள்ள பிரபல "ஏ.ஜி.எஸ் திரையரங்கம்" அட்மோஸ் மற்றும் 4 கே (4K) தொழில்நுட்பத்துடன் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சென்னை வில்லிவாக்கம் மற்றும் நாவலூரில் உள்ள திரையரங்குகளில் இந்த தொழில்நுட்பங்கள் புதிதாக இணைக்கப்படுகிறது.

    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `பாகுபலி 2' வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி-2 வெளியாக இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.



    தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 1750 திரையரங்குகளில் ரிலீசாக உள்ள பாகுபலி 2, அமெரிக்காவில் மட்டும் 750 திரைகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜாராஜன் வாங்கி உள்ளார்.

    தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) வீடியோ வடிவில் வருவது இதுவே முதல்முறை. இந்நிலையில், `பாகுபலி 2' படத்திற்காக "ஏ.ஜி.எஸ் திரையரங்கம்" அட்மோஸ் மற்றும் 4K வீடியோ வடிவில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×