என் மலர்

    சினிமா

    சமரச பேச்சுவார்த்தைக்கு வக்கீல்களுடன் நடிகர் வடிவேலு, நடிகர் சிங்கமுத்து வந்தபோது எடுத்தபடம்.
    X
    சமரச பேச்சுவார்த்தைக்கு வக்கீல்களுடன் நடிகர் வடிவேலு, நடிகர் சிங்கமுத்து வந்தபோது எடுத்தபடம்.

    நிலமோசடி வழக்கு: நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஐகோர்ட்டில் ஆஜர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நில மோசடி வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்காக சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஆஜரானார்கள். ஆனால், நீதிபதி முன்பு நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
    சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் நடிகர் வடிவேலு 2002-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவரின் வாரிசுகளிடம் இருந்து நிலத்தை வாங்கினார். இதற்கு ‘பவர் ஏஜெண்டாக’ நடிகர் சிங்கமுத்து செயல்பட்டார். இந்த நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வடிவேலு முயன்றபோது, பழனியப்பன் என்பவர் நிலத்துக்கு உரிமை கொண்டாடினார்.

    இதுகுறித்து விசாரித்தபோது, நிலத்தின் உரிமையாளரான மறைந்த ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் இந்த நிலத்தை அடமானம் வைத்திருந்தார். கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் 2006-ம் ஆண்டு தொழில் முதலீட்டு நிறுவனம் அந்த நிலத்தை ஏலம் விட்டது. அதை பழனியப்பன் ஏலம் எடுத்தது வடிவேலுவுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில், நடிகர் சிங்கமுத்து, ராமச்சந்திரனின் வாரிசுகள் கங்கா, சாந்தகுமாரி உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு புகார் செய்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.



    இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கா உள்பட 5 பேர் 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மற்றும் கங்கா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக போவதாக அவர்களின் வக்கீல்கள் கூறினர்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து உள்ளிட்டோர் ஏப்ரல் 7-ந்தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அன்று அவர்கள் ஆஜராகவில்லை. அடுத்த விசாரணைக்கு வராவிட்டால் நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்துவுக்கு எதிராக வாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.



    இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் தன்னுடைய அறையில் வைத்து விசாரித்தார். நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து, மனுதாரர்கள் கங்கா உள்பட அனைவரும் நேரில் ஆஜரானார்கள்.

    அப்போது அவர்களிடம் நீதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். நிலமோசடி வழக்கு மட்டுமல்லாமல், பிற வழக்குகளும் இருதரப்பினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நடந்தும் தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து கங்கா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், தங்கள் காரில் ஏறிச்சென்றனர்.
    Next Story
    ×