என் மலர்

    சினிமா

    நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது: ரஜினி, கமல் பங்கேற்கவில்லை
    X

    நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது: ரஜினி, கமல் பங்கேற்கவில்லை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்கவில்லை.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு காலி மனையாக இருக்கிறது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள் அறிவித்தனர்.

    கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர். ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் போன்றவையும் இங்கு அமைய உள்ளன.



    இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 31-ந் தேதி நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    இந்த விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் முதல் செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு செங்கலை வைத்து அடிக்கல் நாட்டினர். இந்த விழாவில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×