என் மலர்

    சினிமா

    உகாதி பரிசாக நானி-அஞ்சனாவுக்கு பிறந்த ஆண் குழந்தை
    X

    உகாதி பரிசாக நானி-அஞ்சனாவுக்கு பிறந்த ஆண் குழந்தை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உகாதி பரிசாக நானி-அஞ்சனா ஜோடிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நானி `வெப்பம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் `நான் ஈ',  `ஆஹா கல்யாணம்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்திருந்தார். இதில் `நான் ஈ' படத்தில் இவரது கதாபாத்திரம் பேசுப்படியாக  அமைந்தது. 

    தனது தோழியான அஞ்சனாவை, 5 வருடங்களாக காதலித்து வந்த நானி கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் நேற்று அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. நேற்று உகாதி திருநாள் பரிசாக அவருக்கு குழந்தை பிறந்ததால்,  உகாதி கொண்டாட்டத்துடன் தனது குழந்தை பிறந்ததையும் நானி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.



    நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான `நேனு லோக்கல்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அதனைத் தொடர்ந்து தற்போது `நின்னுக்கோரி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஷிவா நிர்வானா இயக்கி வரும் இப்படத்தில்  நானிக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு `மிடில் கிளாஸ் அப்பாயி' என்ற படத்தில்  நானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
    Next Story
    ×