என் மலர்

    சினிமா

    கீர்த்தி சுரேஷை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்
    X

    கீர்த்தி சுரேஷை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சமீபத்தில் வெளியான `பாம்புசட்டை' படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    சமீபத்தில் வெளியான `பாம்புசட்டை' திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்  கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என  கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீடு பிரச்சினை என ஒரு போராட்டத்திற்கு பின்பே தன் முதல் திரைப்படம்  மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது, என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். 

    இயக்குநர் ஷங்கருடன் `எந்திரன்', `அந்நியன்', `சிவாஜி' படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு  `பாம்புசட்டை' முதல் திரைப்படம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஆடம் தாசன் கூறியதாவது,



    என் வீடு இருக்கும் தெருவில் தினமும் காலையில் தெருவை சுத்தம் செய்து குப்பைகளை அள்ளிச்செல்ல ஒரு இளம்பெண்  வருவாள். மிக அழகாக இருப்பாள். அந்த பெண்ணுக்கு ஒரு காதல் இருந்தால், அது எப்படி இருக்கும் என யோசித்தேன். அதுதான்  பாம்புசட்டையில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம். படம் பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷையும் அவரது கதாபாத்திரத்தையும்  கொண்டாடும்போது நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு எளிய மனிதனாக எளிய மனிதர்களைப்பற்றிய கதையை  சினிமாவாக எடுத்ததில் பெருமைப்படுகிறேன் என்றார்.



    இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியது குறித்து ஆடம் தெரிவித்ததாவது,

    ரஞ்சித் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று அழைத்தார். 30 நிமிடங்களுக்கும் மேலாக படத்தைப்பற்றி  பேசிக்கொண்டிருந்தார். அதிலும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தைப் பற்றியும், அவரது அப்பாவாக நடித்த சார்லி சார் பற்றியும்  சிலாகித்து பேசினார். கீர்த்தி சுரேஷ் பாத்திரப் படைப்பிற்காக உங்களை நூறு முறை பாராட்டுவேன் என்று கட்டிப்பிடித்துக்  கொண்டார். எளிய மக்களின் கதைகள் சினிமாவாகி, அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, அது ஒரு படைப்பாளனின்  தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, இந்த சமூகத்தின் மகிழ்ச்சி என்றார் இயக்குனர் பா.ரஞ்சித்.

    ஒரே ஒரு பருக்கையைக்கூட வீணாக்க விரும்பாத ஆடம் தாசனின், முதல் பருக்கையான `பாம்புசட்டை' பலவகையான  விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டிருப்பதில் ஆடம் தாசன், உற்சாகமாக தனது அடுத்த படத்திற்கான கதை  பற்றிய யோசனையில் இருக்கிறேன் என்கிறார்.
    Next Story
    ×