என் மலர்

    சினிமா

    ‘பிலிம் சேம்பர்’ தலைவராக எல்.சுரேஷ் தேர்வு
    X

    ‘பிலிம் சேம்பர்’ தலைவராக எல்.சுரேஷ் தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக எல்.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் சென்னையில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில்  நேற்று நடந்தது. இந்த தேர்தலில் எல்.சுரேஷ் 1,259 ஓட்டுகள் பெற்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆனந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் `பில்லா' படத்தை தயாரித்தவர்.

    இந்த நிறுவனம் `நாடோடி மன்னன்', `ஒளிவிளக்கு', `மனோகரா' உள்பட 700-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது. துணைத்தலைவர்களாக சாய்பிரசாத், ஏ.கணேஷ், வி.பி.மாதவன் நாயர், ஏ.வி.எம்.கே.சண்முகம் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர்களாக ரவி கொட்டாரக்கரா, என்.ராமசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள்.  பொருளாளராக கே.கிருஷ்ணா ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.



    செயற்குழு உறுப்பினர்களாக குட்டி பத்மினி, கே.எஸ்.ராமகிருஷ்ணா, பி.ரவிகுமார், வெங்கடாத்ரி, கே.நந்தகுமார், கோபால்தாஸ்,  ஜெகநாததாஸ், டி.எஸ்.ராம்பிரசாத், அம்பிகாபதி, ஜெயசிம்மலு, சீனிவாசன், சத்யசீலன் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×