என் மலர்

    சினிமா

    தமிழர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை: லைக்கா நிறுவனம் விளக்கம்
    X

    தமிழர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை: லைக்கா நிறுவனம் விளக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் வழங்கும் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
    இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் வழங்கும் விழா வரும் ஏப்ரல் 10-ந் தேதி நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டு தமிழர்களுக்கு வீடு வழங்குவதாக இருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்று பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பவே ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

    ரஜினியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த லைக்கா நிறுவனம் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளது. இதுகுறித்து லைக்கா நிறுவனம் சார்பில் கூறும்போது, எங்களது திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எண்ணத்தில்தான் வீடுகளை கட்டிக் கொடுக்கிறோம்.

    ரஜினியின் வருகையின்போது பல்வேறு நலத்திட்டங்களையும் தொடர இருந்தோம். இருப்பினும், திட்டமிட்டபடி ஏப்ரல் 10-ந் தேதி தமிழர்களுக்கு வீடுகளை வழங்கும்போம். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அரசியல் தலைவர்களுக்கு நன்றி. இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும் பாடுபட வேண்டும்.



    தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பியே ரஜினியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுயலாபத்திற்காக சிலர் பரப்பும் வதந்திகளை அரசியல்வாதிகளும் ஆதரிக்கின்றனர். ராஜபக்சேவுக்கும் எங்களுக்கும் தொழில் தொடர்பு இருப்பதாக கூறுவதெல்லாம் வெறும் வதந்திதான்.

    தொழில் போட்டியாளர்களும் எங்களுக்கு எதிராக கட்டுக்கதைகளை சொல்லி வருகின்றனர். அரசியல்வாதிகளும் வதந்திகளை பரப்புவதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் எதுவும் செய்ததில்லை என்று தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
    Next Story
    ×