என் மலர்

    சினிமா

    எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி
    X

    எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாடலுக்கு உரிமை கோரி எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே என்று மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த தகவல்களை கீழே பார்க்கலாம்.
    இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியா காவியப்  பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை  பிடித்திருக்கின்றன.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, அவரது மகன்  எஸ்.பி.பி.சரண் `எஸ்.பி.பி 50' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். அதனை அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு  நாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பாலசுப்பிரமணியன் பாடி வருகிறார். 



    இதற்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் முறையான அனுமதியின்றி  தன்னுடைய பாடல்களை எப்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேடையில் பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில்,  இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ, அல்லது மேடைகளில் பாடினாலே அது  காப்புரிமை மீறலாகும் என்று கூறப்பட்டிருந்தது.

    இருதரப்புக்கும் இடையே பகிரப்படும் கருத்து வேறுபாடுகளுக்கிடையே, இளையராஜா தரப்பு செய்தது சரியே என்று  பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதன் கூறியதாவது,

    சட்டப்படி பார்க்கும் போது இளையராஜா தரப்பினர் செய்தது சரியே, ஒரு பாடல் அந்த பாடலின் இசையமைப்பாளர்,  பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கே சொந்தமானதாகும் என்று கூறியுள்ளார்.



    பாடலுக்கான உரிமை என்ற கோணத்தில் பார்க்கும் போது, அதனை நட்பு என்ற வீதத்தில் ஒதுக்க முடியாது. இந்த பிரச்சனை  குறித்து இளையராஜா அனுப்பிய நோட்டீசில் அதுபற்றி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பாடலானது திரையரங்கு தவிர்த்து வெளி நிகழ்ச்சிகளில் மக்கள் முன்பு பாடப்பட்டால், அந்த நிகழ்ச்சிக்காக வசூலிக்கப்படும்  தொகை இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளரிடம் கொடுக்கப்பட வேண்டும்.

    இதற்காக ஐபிஆர்எஸ் என்ற அமைப்பின் மூலம் நிகழ்ச்சிகளுக்காக வசூலிக்கப்படும் தொகை சேரவேண்டியவர்களுக்கு கொண்டு  சேர்க்கப்படுகிறது. ஆனால் இளையராஜா தரப்பை பொறுத்தவரை அவ்வாறு செய்யாமல், தாமாகவே இந்த உரிமை குறித்த  வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



    மேலும் இளையராஜாவே அவர் இசையமைத்துள்ள பாடல்களை இசைக்க, குறிப்பிட்ட தயாரிப்பளர் மற்றும் பாடலாசிரியரிடம்  அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் பொது மேடைகளில் இசையமைத்தால், அவருக்கு எதிராக  பாடலாசிரியரோ, தயாரிப்பாளரோ வழக்கு தொடரலாம். அவ்வாறு வழக்கு தொடரும் பட்சத்தில், இளையராஜாவே மற்ற  மேடைகளில் இசையமைக்க முடியாது.

    எனவே இளைராஜா எடுத்துள்ள இந்த முடிவை தான் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×