என் மலர்

    சினிமா

    சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்
    X

    சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சமூக வலைத்தளங்களில் நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்து அவதூறு கருத்துகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் பற்றியும் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவதூறு தகவல் வெளியானது. இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



    எனினும் அவரைப்பற்றி தொடர்ந்து அவதூறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றம், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை, ஜல்லிக்கட்டு போராட்டக் குழு, மாற்றுத்திறனாளிகள் நடனக்குழு போன்ற அமைப்புகள் சார்பில் தனித்தனியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

    நடிகர் ராகவா லாரன்ஸ் ரசிகர்களும் அதிகளவில் திரண்டு வந்ததால் கமிஷனர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×