என் மலர்

    சினிமா

    படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்
    X

    படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பத்மாவதி படப்பிடிப்பு தளத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சூறையாடினர். இந்த சம்பவத்திற்கு இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் வரலாற்று படம் ‘பத்மாவதி’. இதில், நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இதையொட்டி, கோலாப்பூர் மாவட்டம் மசாய் பத்தார் பகுதியில் தளம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சம்பவத்தன்று அதிகாலை 1 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள், படப்பிடிப்பு தளத்துக்கு தீ வைத்து சூறையாடினர்.

    இதற்கு இயக்குனர் ராஜ மவுலி, தயாரிப்பாளர் கரண் ஜோகர் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி மும்பையில் நேற்று நடைபெற்ற ‘பாகுபலி-2’ டிரெய்லர் வெளியீட்டு விழாவின்போது, கரண் ஜோகர் பேசியதாவது:-



    ஒரு இயக்குனராக, மனிதநேயமுள்ளவனாக, நமது மதிப்புமிக்க, அற்புதமான நாட்டின் குடிமகனாக இந்த சம்பவம் என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்கிறது. என்னுடைய ஆதரவு, சிந்தனை மற்றும் எண்ணம் ஆகியவை சஞ்சய் லீலா பன்சாலியுடன் இருக்கும். இதுபோன்ற ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம், மற்றொரு தயாரிப்பாளருக்கு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறோம்.

    இவ்வாறு கரண் ஜோகர் தெரிவித்தார்.

    இயக்குனர் ராஜ மவுலி பேசுகையில், “கருத்து சுதந்திரம் என்பது நமது அடிப்படை உரிமை. ஒரு கலைஞனாக தன்னுடைய கனவை வெளிப்படுத்த சஞ்சய் லீலா பன்சாலிக்கு சுதந்திரம் இருக்கிறது” என்றார்.
    Next Story
    ×