என் மலர்

    சினிமா

    பிரபல இயக்குநர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானார்
    X

    பிரபல இயக்குநர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரபல இயக்குநர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் 90-களில் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் செய்யாறு ரவி மாரடைப்பால் இன்று காலமானார்.  

    தமிழில் 1993-ல் பிரபு நடித்து  வெளியான `தர்மசீலன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமன ரவி, அதன் பின்னர் 1998-ல் நடிகர்  கார்த்திக்-மீனாவை வைத்து `அரிச்சந்திரா' என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு காமெடி விருந்தாக அமைந்தது.



    அதன் பின்னர் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ரவி தொலைக்காட்சியில் நாடகங்கங்களை இயக்கத் தொடங்கினார். `கோபுரம்', `பணம்',  `ஆனந்தம்' உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ள அவர் `அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற தொடரை கடந்த 2 வருடங்களாக  இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் `த்ரிஷ்யம்' படத்தையும் சிங்கள மொழியில் `தர்மயுத்தயா' என்ற பெயரில் இயக்கியுள்ளார். அந்த படம் திரையில் வெளியாக  தயாராகி உள்ள நிலையில் அவர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர்.
    Next Story
    ×