என் மலர்

    சினிமா

    சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
    X

    சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள `வனமகன்' படத்தை சிம்பு, தனுஷ் படங்கள் ரிலீஸ் தேதியிலேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    `போகன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி `வனமகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தற்போது `நாய்கள்  ஜாக்கிரதை' பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்' படத்தில் நடித்து வருகிறார்.

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள படம் `வனமகன்'. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும்  டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில், ஜெயம்ரவியுடன், சாயிஷா சேகல்,  தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரிலீசாக தனுஷ் இயக்கியுள்ள `பவர்பாண்டி' படமும், லாரன்ஸின் `சிவலிங்கா' படமும் ரிலீசாவது  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் `ஏஏஏ' படமும் அதே நாளில் ரிலீசாகும் என்று கூறப்படும் நிலையில், ஜெயம்  ரவியின் `வனமகன்' படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை அறிய  காத்திருக்கத் தான் வேண்டும்.
    Next Story
    ×