என் மலர்

    சினிமா

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் விவசாயிகளின் ஒப்புதலை பெற விவேக் வேண்டுகோள்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் விவசாயிகளின் ஒப்புதலை பெற விவேக் வேண்டுகோள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாயிகளின் ஒப்புதலை பெற்ற பிறகே நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் நியூட்ரினோ திட்டம் குறித்து நடிகர் விவேக் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ திட்டங்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக செய்யப்பட்டாலும் சரி, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வந்தாலும் சரி, தமிழகத்தின் விவசாயத்தை பாதிக்கும் வகையிலும், விவசாய மக்களின் ஆதாரமாக விளங்கும் நீர், நிலம், காற்று மாசுபடும் அளவில் இருந்தால், அதை விவசாய பெருமக்களை கலந்து கொண்டு தீர ஆலோசித்து, விவசாய பெருமக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் அவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.



    ஏற்கனவே நாம் நீர் வளத்தை வஞ்சித்து இருக்கிறோம். மரங்களை வெட்டியதால் மழை இல்லை. தண்ணீருக்காக நாம் கேரளாவின் முல்லைப்பெரியாறு, ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர், கர்நாடகாவின் காவிரி நீர் ஆகியவற்றையே நம்பி இருக்கிறோம்.

    இந்த சூழ்நிலையில், இது போன்ற திட்டங்கள் நாட்டின் நன்மைக்காக இருப்பினும், அந்த பகுதியின் விவசாயத்துக்கு ஊறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். நாட்டின் சராசரி மழை ஆயிரத்து 200 மில்லி மீட்டர் அதில் தமிழகத்தில் சராசரியாக 921 மில்லி மீட்டர் மழை பெய்யும். பெரும்பாலான ஆண்டுகளில் பருவமழை பொய்த்து போவதால் இதுவும் கிடைக்காது.

    காமராஜர் ஆட்சியின் போது பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், அவை எதுவும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் நன்மை விளைவிப்பதாகவே இருந்தது. அது போல எந்த ஒரு திட்டம் என்றாலும் அது தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நன்மை தரக்கூடியதாக அமைய வேண்டும்.

    பசுமை கலாம் அமைப்பின் மூலம் இதுவரை நான் 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்று கலாம் எனக்கு கட்டளை இட்டு இருக்கிறார். அதை நிறைவேற்றும் பாதையில் பயணிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×