என் மலர்

    சினிமா

    தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு
    X

    தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான ஒரு அணியும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

    இந்நிலையில், இன்று நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் பிலிம் சேம்பர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் புகார் கொடுக்கலாம். 28.02.2017-ல் புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.



    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017. ஏப்ரல் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும். அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். விஷால் அணி சார்பாக பிரகாஷ்ராஜ், ஆர்.பார்த்திபன்,  K.E.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ், SR.பிரபு, AL உதயா மற்றும் ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×