என் மலர்

    சினிமா

    நடிகை பாவனாவை கடத்திய மேலும் ஒருவர் கைது
    X

    நடிகை பாவனாவை கடத்திய மேலும் ஒருவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி  நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப் பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று  கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த  கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை  செல்போனிலும் படம்பிடித்தனர்.

    டிரைவர் உள்பட 3 பேர் கைது

    நடிகை பாவனா டைரக்டர் லால் உதவியுடன் இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். போலீசார்  அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும்  கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர்.

    முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர  வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    இந்த வழக்கில் துப்பு துலக்க போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் உடனடியாக  விசாரணையை தொடங்கினார். நடிகை பாவனா ஓடும் காரில் கொடுமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு  காமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையை தொடர்ந்து சுனிலின் கூட்டாளியான மணிகண்டன் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். அவரை  பாலக்காட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மூலம் தலைமறைவாக உள்ள சுனில் மற்றும் விஜேஷ்  ஆகியோரை கைது செய்ய போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் சுனில் தனது செல்போனை முன் ஜாமீன் தாக்கல் செய்த வக்கீலிடம் கொடுத்திருந்தார். அதை வக்கீல்  கோர்ட்டில் ஒப்படைத்தார். அந்த செல் போனை போலீசார் பெற்று சைபர்கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்த முடிவு  செய்து உள்ளனர்.

    அந்த செல்போன் மூலம் சுனில் பிரபல நடிகர் மற்றும் சில தயாரிப்பாளர்கள் பலரிடமும் பேசி உள்ளார். அவரிடமும் பலர்  தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அதுபற்றியும் விசாரித்து துப்புதுலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டி.ஜி.பி.

    இந்த சம்பவம் தொடர் பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறியதாவது:-

    கேரளாவில் பெண் களுக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்கி வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு டிரைவரை  மட்டும் நம்பி நடிகையை சினிமா தயாரிப்பாளர் அனுப்பியிருக்ககூடாது. பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்பி இருக்கலாம்.  பாவனாவை கடத்திய முக்கிய குற்றவாளியான சுனில் சிக்கும்போது அவரை யாராவது தூண்டி இதனை செய்தார்களா? என்பது  தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இதற்கிடையில் முதல்- மந்திரி பினராய் விஜயன், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன்  ஆகியோர் நடிகை பாவனாவிடம் செல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய அவர்கள்  இந்த சம்பவத்தில் அரசு விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் என்றும் யாரும் தப்பமுடியாது என்றும்  தெரிவித்தனர்.
    Next Story
    ×