என் மலர்

    சினிமா

    அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பாவனா: தஞ்சம் கொடுத்த நடிகர் லால் உருக்கம்
    X

    அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பாவனா: தஞ்சம் கொடுத்த நடிகர் லால் உருக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாலியல் புகாரை வாபஸ்பெற கூறியதால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பாவனா தவித்து வருகிறார். அவருக்கு தஞ்சம் கொடுத்த நடிகர் லால் உருக்கமான பேட்டி அளித்தார். அவரது பேட்டியை கீழே பார்ப்போம்.
    பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    தன்னை கொடுமைப்படுத்திய கும்பல் தப்பிச் சென்றபிறகு நடிகை பாவனா அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு கார் மூலம் பிரபல  மலையாள நடிகரும் டைரக்டருமான லாலின் வீட்டிற்கு சென்று அவரது உதவியை தான் முதலில் நாடினார். இவர் பாவனாவுக்கு  உறவினர் ஆவார்.

    நடிகர் லால் தமிழில் `சண்டைக்கோழி', `தீபாவளி' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். `தீபாவளி' படத்தில் நடிகை  பாவனாவுக்கு அவர் தந்தையாக நடித்திருந்தார்.

    தனது உதவியை பாவனா நாடியது பற்றி நடிகர் லால் கூறியதாவது:-

    நடிகை பாவனா சம்பவம் நடந்த அன்று இரவு எனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமைப்பற்றி கூறியபோது அதிர்ந்து  போனேன். இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி.யை தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை  எனது வீட்டிற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார்.

    மறுநாள் இந்த சம்பவம் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனால் பாவனா மிகவும் மனவேதனை அடைந்தார்.  புகாரை வாபஸ் வாங்கி விடலாம் என்றுகூட நினைத்தார். காரணம் அந்தளவுக்கு அவர் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல்  இருந்தார்.

    அவரிடம் போலீஸ் டி.ஜி.பி. இதுபோல 3 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இந்த புகார் மூலம்  உங்களுக்கு சிக்கல் வராமல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

    இதன்பிறகே அவர் சமாதானமடைந்தார். டி.ஜி.பி.யிடம் இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நட வடிக்கை  எடுக்கப்படும் என்று கூறினேன். மேலும் பாவனாவுக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும் கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×