என் மலர்

    சினிமா

    என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்: அஞ்சலி
    X

    என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்: அஞ்சலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    “என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்” என்று நடிகை அஞ்சலி கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை கீழே விரிவாக பார்க்கலாம்.
    நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- சித்தி தகராறு உள்ளிட்ட குடும்ப சச்சரவுகளில் இருந்து மீண்டு விட்டீர்களா?

    பதில்:- எந்த வீட்டில் பிரச்சினை இல்லை. சிறுசிறு சண்டை, கருத்து மோதல்கள் எல்லா குடும்பத்திலுமே இருக்கிறது. ஆனால் அவை நிரந்தரம் இல்லை. நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் வாழ்க்கையை நகர்த்துவதில்தான் சந்தோஷம் இருக்கிறது. நான் இப்போது பழைய விஷயங்களை மறந்து விட்டு உற்சாகமாக இருக்கிறேன்.

    கேள்வி:- நீங்கள் ஒருவரிடம் இருந்து கார் பரிசாக பெற்றதாக கிசுகிசுக்கள் வந்துள்ளதே?

    பதில்:- இதை கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய காரை பரிசாக வாங்கினேன் என்று பேசுவது அபத்தம். கார் வாங்க கூட வசதி இல்லாமலா இருக்கிறேன். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தில் ஒரு பாடலுக்கு 48 மணிநேரம் இரவு பகலாக கஷ்டப்பட்டு நடனம் ஆடினேன். சித்ராங்கதம் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் கடும் குளிரில் நடந்தபோது அதிலும் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். இப்படி ஒவ்வொரு படத்திலும் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்துதான் கார் வாங்கி இருக்கிறேன். அதை பரிசு என்று பேசுவது வேதனையாக இருக்கிறது.

    கேள்வி:- கதாநாயகிகள் 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நீடிக்க முடியாது என்பதை உணர்ந்து சம்பாதித்த பணத்தை நகை வியாபாரம், ரியல் எஸ்டேட் என்று முதலீடு செய்கிறார்கள் நீங்கள் எப்படி?

    பதில்:- நான் சினிமாவில் அறிமுகமானபோது இவ்வளவு நாட்கள் எனது மார்க்கெட் நிலைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டமும் கடின உழைப்பும் எனக்கு வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுத்தருகிறது. எனது படங்கள் தோல்வி அடையும்போது வியாபாரத்தில் முதலீடு செய்வேன்.

    கேள்வி:- உங்கள் திருமணம் எப்போது?

    பதில்:- அதுபற்றி இன்னும் சிந்திக்கவில்லை. நேரம் வரும்போது நடக்கும்.

    கேள்வி:- உங்கள் மனதுக்கு பிடித்தவர் எப்படி இருக்க வேண்டும்?

    பதில்:- எனக்கு கணவராக வருகிறவருக்கு நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். கவுரவமானவராகவும், நாகரிகமானவராகவும், அழகானவராகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட என்னை வாழ்க்கை முழுவதும் ராணி மாதிரி வைத்துக்கொள்பவரை திருமணம் செய்து கொள்வேன்

    கேள்வி:- நீங்கள் சொன்ன இந்த லட்சணம் உள்ள இளைஞரை சந்தித்து விட்டீர்களா?

    பதில்:- சந்தித்து விட்டேன். ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இன்னும் வரவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×