என் மலர்

    சினிமா

    எதுவுமே சகிக்கல: ஜெயலலிதா சமாதியில் கவலையுடன் நின்ற பார்த்திபன்
    X

    எதுவுமே சகிக்கல: ஜெயலலிதா சமாதியில் கவலையுடன் நின்ற பார்த்திபன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற பார்த்திபன், அங்கு கவலையுடன் நின்று சில விஷயங்களை யோசித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களை கண்டு பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்துள்ளார். இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முதன்முறையாக சென்ற பார்த்திபன், அங்கு நின்றுகொண்டு சில விஷயங்களை பற்றி யோசித்துள்ளார். தன்னுடைய யோசனையில் உதித்த விஷயங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    முதன்முறையாக மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன். தியானிக்க அல்ல.... ஜீரணிக்க!

    மரணத்தின் மர்மம், மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மர்மம், அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை விளங்காமல் கலங்கரை விளக்கத்திலிருந்து நடந்து சென்றேன்.

    கட்சிகளின் கல்மிஷங்கள் இல்லாத எம்.ஜி.ஆரின் விசுவாசிகள், அதிமுக தொண்டர்கள், அறியா பொது ஜனங்கள் அணையா தீபங்களாய் அங்கே ஒளியூட்டல்! அம்மா என்றழைக்கப்பட்டவரின் ஆன்மா என்ன நினைக்கும்? எனக்கும் அவருக்குமான சில சந்திப்புகளும் சம்பாஷைனைகளும் வந்து போயின நினைவில்!

    நம்பிக்கை துரோகமும், துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கல! திருமதி சசிகலாவோ, திருமிகு.ஓ.பி.பன்னீர்செல்வமோ ஆட்சியமைப்பது சட்ட பூர்வமேயாகையால் சட்டு புட்டுன்னு சட்டசபைக்கு வந்து மக்கள் பணி பாருங்கள்! எம்மக்கள் திருந்திவிட்டார்கள்! மறு தேர்தலை சந்திக்க வாருங்கள்! நோட்டுக்காக அல்ல, நாட்டுக்காகவே ஓட்டு!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×