என் மலர்

    சினிமா

    மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த முதல்வருக்கு சிம்பு நன்றி
    X

    மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த முதல்வருக்கு சிம்பு நன்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மக்கள் சார்பாக சிம்பு முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வருக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டு ஆதராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் நடிகர் சிம்புவும் ஒருவர். அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்களுக்கு பக்கதுணையாக இருந்து, அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். சமீபத்தில்கூட ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையில் முடிந்தது குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்தார்.

    அதேநேரத்தில், தமிழக அரசுக்கு மூன்று கோரிக்கைகளையும் முன் வைத்திருந்தார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில் சட்டசபையில் தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் ஒரு புரட்சியாக உருவெடுத்து வெற்றியை ஈட்டியது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு தமிழன் என்ற முறையில் இந்தப் புரட்சியில் மக்களில் ஒருவனாக பங்கெடுத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.

    அதேநேரத்தில், அறவழிப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் வன்முறை வெடித்தது துரதிருஷ்டமானது. அது தொடர்வாக தொடர்ந்து என் கவலையைப் பகிர்ந்து வந்ததுடன், இதுதொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிக மக்கள் சார்பாக மூன்று முக்கியக் கோரிக்கைகைளை முன் வைத்தேன்.

    மீனவர்கள், மாணவர்கள் என பலரை கைது செய்துள்ளீர்கள். அத்தனை பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைத்தே ஆகவேண்டும். இவ்வளவு நாள் அவர்கள்பட்ட கஷ்டத்துக்கு அரசாங்கமே ஒருநாளைத் தேர்வு செய்து நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த வெற்றி. இன்றைக்கு சந்தோஷமாக ஜல்லிக்கட்டு நடத்தலாம் என சொல்லவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கைகள்.

    இந்த நிலையில் சென்னை நடுக்குப்பத்தில் ரூ.10 லட்சத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் என்றும் கைது செய்யப்பட்ட 14 மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களோடு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வோம் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனை வரவேற்பதுடன் தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்ததற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதியும் முதல்வருடன் ஆலோசித்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

    மேலும், ஜல்லிக்கட்டு தொடர்வாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதும். நம் தமிழர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகப் பார்க்கிறேன்.

    வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×