என் மலர்

    சினிமா

    தமிழர்களின் பாரம்பரிய கலைகளை சினிமாவில் புகுத்த வேண்டும்: நடிகர் ராம்ஜி
    X

    தமிழர்களின் பாரம்பரிய கலைகளை சினிமாவில் புகுத்த வேண்டும்: நடிகர் ராம்ஜி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழர்களின் பாரம்பரிய கலைகளை சினிமாவில் புகுத்தவேண்டும் என்று ஈரோட்டில் நடிகர் ராம்ஜி கூறினார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    திரைப்பட நடிகரும், நடன இயக்குனருமான ராம்ஜி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா துறைக்கு வந்துவிட்டேன். தற்போது 25 ஆண்டுகள் ஆகிறது. 30 படங்களில் நடன இயக்குனராகவும், 400-க்கும் மேற்பட்ட படங்களில் உதவி நடன இயக்குனராகவும் பணி புரிந்து உள்ளேன். ‘வீரபாண்டி கோட்டையிலே, வெள்ளிக்கிழமை 13-ந் தேதி, நதி கரையினிலே, வட்டாரம்‘ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். ஏராளமான டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளேன்.

    நடிகர் அஜித்குமார் நடித்த காதல் கோட்டை படத்தில் வரும், ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ என்ற பாடலில் நடனம் ஆடியது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. நடிகர்கள் சிவாஜி, ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களை பார்த்து நான் நடிக்க கற்றுக்கொண்டேன். மக்கள் மனதில் நிலைத்திருக்கக்கூடிய எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக உள்ளேன். தற்போது டி.வி. தொடர்களில் மட்டும் நடித்து வருகிறேன்.

    எதிர்காலத்தில் சினிமா படம் இயக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். அரசியலில் ஈடுபாடு இல்லை. தற்போது நிறைய சினிமா தியேட்டர்கள் வந்துவிட்டன. 100 நாட்கள் ஓடி எடுக்கவேண்டிய வசூலை 10 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்கள். நல்ல படமாக இருந்தால் கண்டிப்பாக பொதுமக்கள் தியேட்டருக்கு செல்வார்கள்.

    தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மறைந்து வருகின்றன. அதை சினிமாவில் புகுத்தி புத்துணர்ச்சி அளிக்கவேண்டும். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் அதை கண்டிப்பாக செய்வேன். தமிழ் கலாச்சாரத்துக்கு தகுந்த கதைகளை எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது நான் பெங்களூரில் டி.வி. தொடரில் நடித்துக்கொண்டு இருந்தேன். எனினும் மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் நான் ஒருநாள் மட்டும் கலந்து கொண்டேன். இதை பெருமையாக கருதுகிறேன்.

    இவ்வாறு நடிகர் ராம்ஜி கூறினார்.
    Next Story
    ×