என் மலர்

    சினிமா

    ‘முதல்வர் ஏன் மக்களை சந்திக்ககூடாது?’: சுப்பிரமணியசாமி மீது கமல் கடும் பாய்ச்சல்
    X

    ‘முதல்வர் ஏன் மக்களை சந்திக்ககூடாது?’: சுப்பிரமணியசாமி மீது கமல் கடும் பாய்ச்சல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டுவிட்டரில் அவதூறாக பேசிய சுப்பிரமணியசாமிக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். இகுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    நடிகர் கமல்ஹாசன் ஆரம்ப முதலே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதை தனது டுவிட்டரில் விமர்சித்த சுப்பிரமணியசாமி ஜல்லிக்கட்டை ஆதரித்த கமல் பற்றி ‘பொறுக்கிஸ்’ என்று மோசமான வார்த்தையை பதிவு செய்து இருந்தார். இதற்கு கமல் பதிலடி கொடுத்தார்.

    தென்இந்திய ஒளிப்பதிவாளர் சங்க தமிழ் இணையதள தொடக்க விழாவில் பேசிய கமல் ஹாசன், “யாரோ தமிழ் பொறுக்கின்னாங்க. நான் தமிழ் பொறுக்கிதான். இங்க பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்ச பொறுக்கி. டெல்லியில் பொறுக்க மாட்டேன். என்னை திடீர் என்று அரசியல் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம்” என்று காட்டமாக பதில் அளித்தார்.

    நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், “போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்தும் வேலையை போலீசார் செய்யாமல் இருந்திருந்தாலே பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. எதையும் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்குபடுத்தினாலே போதும்.

    முதல்-அமைச்சர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். அலங்காநல்லூரில் இருந்து திரும்பி வந்தது அவமானம் அல்ல. அது சரிதான். இங்கேயே சந்தித்து இருக்கலாம் என்று எனது கருத்தை சொன்னேன். சட்டசபை நடந்தபின் சந்திக்க இருப்பதாக சொன்னார். அதற்குள் எல்லாம் நடந்து விட்டது” என்று கூறினார்.

    கமல் பேட்டியை வைத்து அவரை மீண்டும் சீண்டும் வகையில் சுப்பிரமணியசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து இருந்தார்.

    அதில், “எப்படி சினிமாகாரர் கமல்ஹாசன், போராட்டக்காரர்களை முதல்-அமைச்சர் சந்திக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக கூறுகிறார். மதுரையில் என்ன நடந்தது? என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு உடனே டுவிட்டரில் பதில் சொன்ன கமல்ஹாசன், “ஹாய்சாமி... நான் தமிழ் வாலா. முதல்வர் மக்களை சந்திக்க வேண்டும். காந்தியும், ஜூலியசீசரும் கூட மக்களிடம் பணிவாகத்தான் இருந்தார்கள். அப்படி இருக்கும் போது முதல்- அமைச்சர் ஏன் மக்களை சந்திக்க கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

    அதை தொடர்ந்து, டுவிட்டரில் மற்றொரு கருத்தை பதிவு செய்த கமல், ‘சுவாமியின் அவதூறுகளுக்கு பதில் சொல்வது இல்லை என்று முடிவு எடுத்துவிட்டேன். தமிழ் பொறுக்கிகள் இதை கையில் எடுக்கட்டும். உங்களுடன் (தமிழர்கள்) காமராஜர், அண்ணா, ராஜாஜி, என் தந்தை உள்பட பலரும் இருக்கிறார்கள். மோதி மிதித்து விடுபாப்பா’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதை தொடர்ந்து, மீண்டும் டுவிட்டரில் ‘அமைதி ஒரு பூடகமான சொல். அது பேசாதிருப்பதா? செயலற்றிருப்பதா? தமிழில் எதை எழுதினாலும் அது நாட்டுக்கே பொருந்தும். உலகுக்கும். ‘வெல் தமிழா’ என்று கமல் குறிப்பிட்டு இருக்கிறார்.

    சுப்பிரமணியசாமிக்கு கமல் கொடுத்த பதிலடியை, இணையதளத்தில் ஏராளமானோர் வரவேற்றுள்ளனர். சுப்பிரமணியசாமிக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.
    Next Story
    ×