என் மலர்

    சினிமா

    மகளிடம் அனுமதி வாங்கியே காவ்யாவை திருமணம் செய்தேன்: திலீப் பேட்டி
    X

    மகளிடம் அனுமதி வாங்கியே காவ்யாவை திருமணம் செய்தேன்: திலீப் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மகளிடம் அனுமதி வாங்கியே காவ்யாவை திருமணம் செய்ததாக நடிகர் திலீப் பேட்டி அளித்துள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    மலையாள நடிகர் திலீப் நேற்று நடிகை காவ்யா மாதவனை திடீர் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

    திருமண விழாவில் திலீப்பின் தாயார் மற்றும் அவரது முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியருக்கு பிறந்த மகள் மீனாட்சியும் கலந்து கொண்டனர். காவ்யா மாதவன் குடும்பத்தில் இருந்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் காவ்யாவின் தந்தை மாதவனும் பங்கேற்றார்.

    மம்முட்டி, ஜெயராம் உள்பட முக்கிய நடிகர்கள் சிலரும் விழாவுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    திருமணம் குறித்த தகவல் நேற்று பகலில் வெளியானதும் திலீப்-காவ்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் பலரும் பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    அதில், குறிப்பாக மஞ்சுவாரியர் ஏற்கனவே சந்தேகப்பட்டு வெளியிட்ட கருத்துக்கள் உண்மையாகி விட்டதாகவும், ரசிகர்கள் இப்போது மஞ்சுவாரியர் பக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

    திருமணம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காத மஞ்சு வாரியரை பாராட்டியும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். அவரது மவுனம் பல உண்மைகளை உலகுக்கு காட்டுகிறது எனவும் பதிவிட்டிருந்தனர்.

    சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய பல்வேறு கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் திருமணம் முடிந்ததும் திலீப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல் திருமண முறிவுக்கு காவ்யா மாதவனை பலர் குறை கூறினர். அது உண்மை இல்லையென எனக்கு தெரியும். விவாகரத்திற்கான காரணத்தை தெரிவித்தால் பலருக்கு இன்னல் ஏற்படும். எனக்காக காவ்யா பல்வேறு அவமானங்களை ஏற்றுக் கொண்டார்.

    எனக்கு மறுமணம் செய்து வைக்க குடும்பத்தார் விரும்பினர். அவர்களிடம் எனது மகள் விரும்பினால் மட்டுமே நான், மறுமணம் செய்வேன் என்று கூறினேன். இதுபற்றி மகளிடமும் விவாதித்தேன். அவர், என்னை இன்னொரு திருமணம் செய்து கொள்ள கூறினார். அவரது அனுமதி கிடைத்த பின்பே மறுமணத்திற்கு ஒப்புக்கொண்டேன்.

    அதற்காக பெண் தேடிய போது, என்னால் அவமானங்களை சந்தித்த காவ்யாவை திருமணம் செய்து கொள்வது நன்றாக இருக்குமென்று உணர்ந்தேன். இதுபற்றி அவரின் குடும்பத்தாரிடம் பேசப்பட்டது. அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். நேற்று முன்தினம் இரவில் எங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு டெலிபோன் செய்து நானும், காவ்யாவும் திருமணம் செய்ய இருப்பதை தெரிவித்தேன்.

    நிகழ்ச்சிக்கு நேரில் வரும் படியும் அழைத்தேன். அப்படி வந்தவர்கள்தான் இன்று விழாவுக்கு வந்த நடிகர்கள். அவர்களின் ஆசியுடன் எங்கள் வாழ்க்கை தொடங்குகிறது. இதனை சர்ச்சையாக்காமல் எங்களை வாழ்த்த வேண்டுமென்று பிறரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திலீப்-காவ்யா திருமணம் மலையாள ஐதீகப்படி நடந்தது. பின்னர் பகல் விருந்துடன் வந்தவர்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு காவ்யா மாதவனுடன் திலீப் அவரது பூர்வீக வீட்டிற்கு சென்றார். அங்கு திலீப்பின் மகள் நிலவிளக்கு ஏந்தி செல்ல காவ்யா வீட்டிற்குள் சென்று குத்து விளக்கு ஏற்றினார். அதன் பிறகு சிறிது நேரம் வீட்டில் தங்கியிருந்த அவர்கள் இருவரும் பின்னர் துபாய்க்கு புறப்பட்டனர்.
    Next Story
    ×