என் மலர்

    சினிமா

    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்-நடிகைகளுக்கு விருது
    X

    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்-நடிகைகளுக்கு விருது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..

    நடைபெற இருக்கும் தென் இந்திய நடிகர் சங்க பொதுக்குழு பற்றிய முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று மதியம் 2:00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள “பெட்ரம்” அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். துணைத்தலைவர் கருணாஸ் 2015-2016 ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை பொதுக்குழு கூட்டத்தில் சமர்பித்து ஒப்புதல் பெறுகிறார். பொருளாளர் கார்த்தி சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்களை பற்றி விளக்கமளிக்கிறார்.

    பொதுசெயலாளர் விஷால் கடந்த கால நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பொது குழுவில் ஒப்புதல் கோரவுள்ளார்.

    மேலும், தலைவர் நாசர், தற்போதைய நாடகங்களின் நிலை குறித்தும் அவற்றின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் விளக்கமளிக்கிறார்.

    இந்த பொதுகுழு கூட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் பொற்கிழி , தமிழ் சினிமா நூற்றாண்டு விழா விருது மற்றும் பொற்கிழி , ஆச்சி மனோரமா விருது மற்றும் பொற்கிழி போன்றவைகள் வழங்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    துணைத்தலைவர் பொன்வண்ணன் நன்றி உரை ஆற்ற இப்பொதுக்குழு கூட்டம் நிறைவடைகின்றது.

    தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பேரவை கூட்ட அழைப்பிதழ் கொண்டு வரும் உறுப்பினர்கள் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×