என் மலர்

    சினிமா

    திரிஷாவுக்கு கணவராகும் டிவி நடிகர்
    X

    திரிஷாவுக்கு கணவராகும் டிவி நடிகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திரிஷாவுக்கு டிவி நடிகர் ஒருவர் கணவராக ஆகப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நாயகி’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், இவர் அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் ‘மோகினி’ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். மேலும், அவருடைய நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும் ‘கொடி’ படமும் அவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

    இப்படங்களுக்கு பிறகு திரிஷா, சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். அதைத் தொடர்ந்து ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையில், ‘கர்ஜனை’ என்ற படத்திலும் சத்தமில்லாமல் நடித்து வருகிறார்.

    ‘கர்ஜனை’ படம் இந்தியில் வெளிவந்த 'NH10' என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் அனுஷ்கா ஷர்மா நடித்த கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷாவுக்கு கணவராக டிவி நடிகர் அமித் பார்கவ் நடிக்கவுள்ளார். இவர் ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’ படத்தில் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    மேலும், இப்படத்தின் வில்லனாக ‘மான் கராத்தே’, ‘இவன் வேற மாதிரி’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா நடிக்கவிருக்கிறார். சுந்தர் என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்கி வருகிறார்.
    Next Story
    ×