என் மலர்

    சினிமா

    ஐஸ்வர்யாராய் நடித்த படத்தை வெளியிட தடை
    X

    ஐஸ்வர்யாராய் நடித்த படத்தை வெளியிட தடை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் இடம்பெற்று இருப்பதால், அந்த படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை விதித்து உள்ளது.
    ஐஸ்வர்யாராய்-ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ள இந்தி படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்.’ இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து இருந்தார். ரன்பீர் கபூருடன் படுக்கை அறை காட்சிகளில் அவர் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஐஸ்வர்யாராய் அரைகுறை ஆடையில் நடித்து இருந்தார்.

    அபிஷேக்பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு வந்த படங்களில் இந்த அளவுக்கு அவர் கவர்ச்சியாக நடிக்க சம்மதிக்கவில்லை என்றும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு இப்படி கவர்ச்சியாக நடித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் இந்தி பட உலகினர் முணுமுணுத்தனர். ஐஸ்வர்யாராயே கதைக்கு கவர்ச்சி தேவை என்று சொல்லி இயக்குனரை வற்புறுத்தி இந்த காட்சிகளை படமாக்க வைத்ததாகவும் தகவல் வெளியானது.

    அவர் கவர்ச்சியாக நடித்ததால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் அதிருப்தியில் இருப்பதாகவும் மாமியார் ஜெயாபச்சன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. கணவர் அபிஷேக்பச்சனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படம் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஐஸ்வர்யாராயின் படுக்கையறை காட்சிகள் ஆபாசமாக இருப்பதாகவும் அந்த காட்சிகள் குழந்தைகள் மனநிலையை பாதிக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். கவர்ச்சி காட்சிகளை அவர்கள் வெட்டி எறிந்து விட்டு படத்துக்கு யுஏ சான்றிதழ் அளித்தனர்.

    கவர்ச்சியான காட்சிகள் மூலம் வயதை மறைத்து மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளும் எண்ணத்தில் இருந்த ஐஸ்வர்யாராய்க்கு தணிக்கை குழுவினரின் நடவடிக்கைகள் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அமிதாப்பச்சன் குடும்பத்தினருக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவத் கானும் நடித்து உள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருந்தது. இந்த நிலையில், அந்த படத்தை திரையிடுவது இல்லை என்று இந்திய தியேட்டர் அதிபர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளது.

    இதுபற்றி அந்த சங்கத்தின் தலைவர் நிதின் தாதர் கூறியதாவது:-

    தேச நலனை கருத்தில் கொண்டும், மக்களின் தேச பக்தியை கருதியும் பாகிஸ்தான் நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இடம் பெறும் எந்த படத்தையும் திரையிடவேண்டாம் என்று தியேட்டர் அதிபர்களை கேட்டுக் கொண்டு உள்ளோம்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு இயல்பு நிலைக்கும் திரும்பும் வரை பாகிஸ்தான் கலைஞர்கள் இடம்பெறும் எந்த படமும் திரையிடப்படமாட்டாது. ஏற்கனவே மராட்டியம், குஜராத், கோவா மாநிலங்களில் இந்த தடை உள்ளது. இப்போது நாங்கள் எடுத்து இருக்கும் இந்த முடிவு பற்றி எல்லா மாநிலங்களுக்கும் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு நிதின் தாதர் கூறினார்.

    பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் நடித்துள்ள ‘ரயீஸ்’ படத்துக்கும் இந்த தடை பொருந்துமா? என்று கேட்டதற்கு, அதுபற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், நிலைமை சீரடைந்தால் அந்த படம் திரையிடப்படும் என்றும், அதுபற்றி இப்போது முடிவு எடுக்க முடியாது என்றும் அவர் பதில் அளித்தார்.

    இந்த முடிவால் படத்தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படாதா? என்று கேட்டதற்கு, “அவர்கள் இதுகுறித்து எங்களை அணுகும் போது இந்த பிரச்சினை குறித்து பேசுவோம்” என்று நிதின் தாதர் பதில் அளித்தார்.
    Next Story
    ×