என் மலர்

    சினிமா

    நான் உங்கள் அப்பாவின் ரசிகன்: சூர்யா குழந்தைகளுடன் டோனி ருசிகர உரையாடல்
    X

    நான் உங்கள் அப்பாவின் ரசிகன்: சூர்யா குழந்தைகளுடன் டோனி ருசிகர உரையாடல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நான் உங்கள் அப்பாவின் ரசிகன் என்று சூர்யாவின் குழந்தைகள் தியா, தேவ்விடம் கிரிக்கெட் வீரர் டோனி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு ‘எம்.எஸ்.டோனி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் வருகிற 30-ந்தேதி திரைக்கு வருகிறது. தமிழிலும் இது ரிலீஸ் ஆகிறது.

    இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்த டோனி சென்னை வந்தார். அவர் பேசும்போது...“தமிழ்நாடு எனக்கு பிடித்தமாநிலம். அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக்கொண்டேன்.

    இந்தியாவில் பல இடங்களில் உணவுகளை சாப்பிட்டது உண்டு. ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் சாப்பிட்டது கிடையாது.தமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம் எனக்கு மரியாதையை உருவாக்கியுள்ளது” என்றார்.

    பின்னர் சூர்யா-ஜோதிகா தம்பதியரின் குழந்தைகள் டோனியுடன் உரையாடினார்கள்.

    சூர்யாவின் மகள் தியா டோனியிடம், “நீங்கள் வீடு, பள்ளி, மைதானம் எங்கே சந்தோ‌ஷமாக இருப்பீர்கள்?” என்று கேட்க,

    “விளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி.பள்ளி எனக்கு இரண்டாவது வீடு. வீடு எனக்கு இரண்டாவது மைதானம்.நான் உங்கள் அப்பா சூர்யாவுடைய ரசிகன்.சூர்யா நடித்த “ சிங்கம் “ படத்தை நான் இந்தியில் பார்த்து வியந்துபோனேன்.என்ன ஒரு கம்பீரம்...” என்று பதில் அளித்தார்.

    “பள்ளி பருவத்தில் நீங்கள் குறும்புத்தனம் செய்வீர்களா?” என்ற கேள்விக்கு டோனி, “நான் பள்ளி பருவத்தில் மிகவும் விளையாட்டுத்தனமாகத்தான் இருப்பேன், இந்த வயதில் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று சொன்னார்.

    அப்போது சூர்யா மகன் தேவ், “நானும் மிக குறும்புதனமான விளையாட்டு பையன்” என்று பதிலளித்தார்...

    பின்பு “உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?” என்று ரசிகர்கள் கேட்டனர்.

    உடனே டோனி, தோரணையுடன் எழுந்து நின்று, சட்டையை கோதிய படி “நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன். அவர் வழியை பின்பற்றுபவன்” என்று சொல்லி ரஜினி ஸ்டைலில் ‘என் வழி, தனி வழி’ என்று கூற, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கலை நிகழ்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

    பின்னர் தனுஷ் இல்லத்தில் ரஜினியை டோனி சந்தித்து பேசினார்.

    Next Story
    ×