என் மலர்

    சினிமா

    நடிகர் சங்க நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக கமிஷனர் அலுவலகத்தில் வாராகி புகார்
    X

    நடிகர் சங்க நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக கமிஷனர் அலுவலகத்தில் வாராகி புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் சங்க உறுப்பினர் வாராகி சங்கத்தின் நிர்வாகிகள் மீது கொலைமிரட்டல் புகாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார்.
    நடிகர் சங்க நிர்வாகிகள் புகார் மனு அளித்துவிட்டு சென்ற சில நிமிடங்களில் நடிகர் சங்க உறுப்பினர் வாராகி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். நடிகர் சங்கத்துக்கு எதிராக போட்டி புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறேன். கடந்த 3-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகிய 3 பேருக்கும், சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மனு அனுப்பினேன்.

    15 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் நான் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறினேன். அந்த கடிதத்துக்கு நடிகர் விஷால் எழுதிய பதில் கடிதம் 24-ந்தேதி எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு சங்க அலுவலகத்துக்கு நேரில் வந்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் அனைத்து கேள்விகளுக்கான தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

    அதன்படி, நான் சங்க அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது தி.மு.க.வை சேர்ந்த பூச்சி முருகன், தி.மு.க. கரை வேட்டி கட்டிய சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்கள், சங்கத்தின் மேலாளர் பாலமுருகன், வக்கீல் ஆகியோர் உள்ளே இருந்தனர். அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தூண்டுதலின் பேரில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களையும், தூண்டுதலாக இருந்த நாசர், விஷால், கார்த்திக், பூச்சிமுருகன், பாலமுருகன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் வாராகி நிருபர்களிடம் கூறும்போது, ‘நடிகர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் ரூ.13 கோடி கிடைத்தது என்று தெரிவித்திருந்தனர். ஆனால் ரூ.7 கோடி தான் கணக்கில் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. விவாதிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×