என் மலர்

    சினிமா

    நடிகர் சங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு : வாராகி, சங்கையா உள்ளிட்டோர் மீது போலீசில் புகார்
    X

    நடிகர் சங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு : வாராகி, சங்கையா உள்ளிட்டோர் மீது போலீசில் புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் சங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாக வாராகி, சங்கையா உள்ளிட்டோர் மீது போலீசில் நடிகர் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் முழு விவரத்தை கீழே பார்ப்போம்...
    நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், சங்கத்தில் உறுப்பினர்களான துணை நடிகர்களுக்கு வேலை வழங்கவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்க உறுப்பினர்கள் வாராகி, சங்கையா தலைமையில் சங்க உறுப்பினர்கள் சிலர் சென்னையில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இது பொய்யான குற்றச்சாட்டு என்றும், புகார் கூறிய வாராகி, சங்கையா ஆகியோரை முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும் நடிகர் சங்கம் சார்பில் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் முழு விவரம் வருமாறு:-

    27.08.2016 காலை 11.30 மணியளவில் சங்க உறுப்பினர் வாராகி சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தார். சங்க செயற்குழு உறுப்பினரும், டிரஸ்டியுமான பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஸ்ரீமன், உதயா மற்றும் சங்க சட்ட ஆலோசகர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆகியோர் வாராகியின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ள காத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால், வாராகி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் யாரும் இல்லாதபட்சத்தில் நான் பேச விரும்பவில்லை என்று கூறி சென்று விட்டார். ஆனால், சங்கத்தின் நுழைவாயில் எதிரே அனைத்து முன்னேற்பாட்டோடு ஊடகங்களை வரவழைத்து பேட்டி கொடுத்தார். இது அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாமென்றும், நுழைவாயில் எதிரே கூட்டம் கூட வேண்டாம் என்றும் அலுவலக ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

    அதற்கு வாராகி மறுத்துவிட்டு, அவருடன் அலுவலகத்திற்கு வெளியே ரவுடிகளை வரவழைத்து கூட்டம் சேர்த்து கொண்டு நிர்வாகத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கோஷம்போட்டு கொண்டு அலுவலக ஊழியர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசினார். அலுவலக ஊழியர்கள் சத்தம் போட வேண்டாம் என்று கூறியதற்கு, என்னைப்பற்றி உங்களுக்கு தெரியாதென்றும், தான் மிகவும் மோசமானவன் என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    மேலும், சங்கத்திற்கு என்று சட்டவிதிகள் உள்ளது. சங்கத்தினுடைய மரபு பாரம்பரியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தி சுயவிளம்பரத்திற்காக சங்கத்தின் கொள்கைகளை கேவலமாக்கிவிட்டார். எனவே, அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும், இச்சம்பவத்தால் பயந்து மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கும் இரு பெண் ஊழியர்கள் உட்பட மற்ற ஊழியர்களுக்கும், சங்க அலுவலகத்திற்கும் பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும், இன்னொரு கடிதத்தில், சங்கையாவும் (தற்காலிகமாக ARO பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்) ஒரு கூட்டத்தோடு வந்து அலுவலக ஊழியர்கள் அனைவரையும் வழக்கம்போல் அருவருக்கதக்க வார்த்தைகளால் பேசினார். சமாதானப்படுத்த சென்ற அலுவலக ஊழியர் ஒருவரின் கைபேசியை பிடுங்கி வீசிவிட்டார். மேலும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டலும் விடுத்தார். இதுபோன்ற சூழ்நிலையை அவர் அடிக்கடி நிகழ்த்தியுள்ளார்.

    ஆகவே, சங்க ஊழியர்கள் தங்கள் பணிகளை தொடர்வதற்கு அச்சப்பட்டு உள்ளனர். கீழ்க்கண்ட நபர்களால் அலுவலக ஊழியர்களுக்கு ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள் என அச்சம் உள்ளது. எனவே, சங்கையா மற்றும் அவர் அழைத்து வந்த கோஷ்டிகளான S.A.ராஜீ, M.உஷா, கோவைலட்சுமி, V.அகிலா, J.B.ராணி, R.தேவி, V.ஜெயந்தி, M.சோலைமணி, A.வீரமணி, V.முரளி, P.சந்தியா, K.S.ரஜினி, R.தேவேந்திரன், S.மலர்கொடி, K.பொன்னுசாமி ஆகியோர்கள் மீது விசாரணை செய்து அலுவலக ஊழியர்களுக்கும், சங்கத்துக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×