என் மலர்

    சினிமா

    கபாலிக்கு கலவையான விமர்சனங்கள் எதிர்பார்த்ததுதான்: இயக்குனர் ரஞ்சித்
    X

    கபாலிக்கு கலவையான விமர்சனங்கள் எதிர்பார்த்ததுதான்: இயக்குனர் ரஞ்சித்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கபாலி விமர்சனங்கள் குறித்து இயக்குனர் ரஞ்சித் பதிலளித்துள்ளார். அதுகுறித்து கீழே பார்ப்போம்...
    ரஜினி நடிப்பில் உருவாகி பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள ‘கபாலி’ படம் அவரது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. படத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் எழுந்தாலும், ஒருபக்கம் கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்நிலையில், ‘கபாலி’ படத்திற்கு ரசிகர்களுக்கு எந்தளவுக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் என்று இயக்குனர் பா.ரஞ்சித்திடம் கேட்டபோது, அவர் கூறும்போது,  

    ‘கபாலி’ படத்தை மக்களுக்கு சீக்கிரமாக காட்டவேண்டும் என்றுதான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். தற்போது ‘கபாலி’ படம் வெளிவந்திருக்கிறது. விமர்சனங்களும் நல்லபடியாக உள்ளது. சில கலவையான விமர்சனங்களும் வந்துள்ளது. இது எதிர்பார்த்ததுதான். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும்போது, நிச்சயமாக ‘பாட்ஷா’ மாதிரியோ, அல்லது வேறு மாதிரியோதான் எதிர்பார்த்து வருவார்கள் என்று எனக்கு தெரியும்.

    ஆனால், ‘கபாலி’ அந்த மாதிரியான படம் கிடையாது என்று தெளிவாக முன்பே சொல்லியிருந்தேன். இது ஒரு எமோஷலான லவ் ஸ்டோரிதான். ஒரு 65 வயது கேங்ஸ்டருடைய வேறொரு பக்கத்தை பேசக்கூடிய ஒரு படம்தான் இது. ரஜினி சாரோட நடிப்பு பற்றி எல்லோரும் பயங்கரமாக சொல்லியிருந்தாங்க. குமுதவள்ளி ராதிகா ஆப்தே மட்டுமில்லாம படத்துல உள்ள எல்லா கதாபாத்திரங்கள் பத்தியும் பயங்கரமா பேசியிருக்காங்க. குறிப்பாக மலேசியாவோட அரசியல் பெரிய விவாதத்துக்கு வந்திருக்கு.

    மக்களுக்கு ரொம்பவும் பிடிச்ச படமாகவும் இது இருக்கு. இந்த படத்தோட முதல் நாள் கலெக்ஷனே மிகப்பெரிய சாதனை பண்ணியிருக்குன்னு பேசிக்கிறாங்க. இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் மக்கள்கிட்ட அதிகமாகியிருக்குன்னுதான் சொல்லணும். அதே சமயத்தில் திருட்டு விசிடியிலும் இந்த படம் வெளிவந்தது பெரிய சோகம். அது வெளியாகாமல் இருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று தோணுது. இருந்தாலும் ‘கபாலி’ படத்துக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×