என் மலர்

    சினிமா

    முதல்நாளிலேயே பாகுபலி சாதனையை முறியடித்த கபாலி
    X

    முதல்நாளிலேயே பாகுபலி சாதனையை முறியடித்த கபாலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பாகுபலி’ படத்தின் சாதனையை முதல்நாளிலேயே ‘கபாலி’ படம் முறியடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்..
    தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாகுபலி’. இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இதுவரை எந்த படமும் எடுக்காத வசூலை பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘பாகுபலி’ செய்த சாதனையை ‘கபாலி’ ஒரேநாளில் முறியடித்துள்ளது.

    ‘பாகுபலி’யின் மொத்த வசூலில் ‘கபாலி’ இந்த சாதனையை முறியடிக்கவில்லை. ஆனால், பிரிமீயர் ஷோவில்தான் ‘பாகுபலி’ வசூல் சாதனையை ‘கபாலி’ முறியடித்துள்ளது. அதுவும், அமெரிக்காவில். அமெரிக்காவில் ‘பாகுபலி’ பிரிமீயர் ஷோவில் ரூ.1.39 கோடி வரை வசூல் செய்தது. தற்போது கபாலி அந்த சாதனையை முறியடித்து ரூ.1.45 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    முதல்நாளிலேயே பாகுபலி சாதனை முறியடித்த ‘கபாலி’ மேலும் மேலும் பல சாதனைகளை படைக்கும் என கூறப்படுகிறது. ‘கபாலி’யின் மொத்த வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. எனினும், வரும் நாட்களில் அவ்வளவு தொகையை ‘கபாலி’ வசூலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
    Next Story
    ×