என் மலர்

    சினிமா

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கபாலி டிக்கெட்டுகளை வாரி இறைத்த திரையரங்கு நிர்வாகங்கள்
    X

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கபாலி டிக்கெட்டுகளை வாரி இறைத்த திரையரங்கு நிர்வாகங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திரையரங்கு நிர்வாகங்கள் கபாலி படத்தின் டிக்கெட்டுகளை வாரி இறைத்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுகுறித்த சிறப்பு கட்டுரையை கீழே பார்ப்போம்...
    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வருகைக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இப்படம் சென்னையில் இதுவரை எந்த படங்களுக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

    அதிகமான திரையரங்குகளில் வெளியானாலும் அத்தனை திரையரங்குகளிலும் எத்தனை மணிக்கு முதல்காட்சியை திரையிடுகிறார்கள் என்பதில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. ஒருசில திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணிக்கே முதல் காட்சியை திரையிடப்போவதாக கூறுகின்றனர். இன்னும் சில திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்குத்தான் முதல்காட்சியை திரையிடப்போவதாக கூறுகின்றனர்.

    ஆனால், விசாரிக்கையில் முதல் காட்சி 4 மணிக்குத்தான் திரையிடப்போவதாக தெரிகிறது. 1 மணிக் காட்சிகள் எல்லாம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்போவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ‘கபாலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. 

    ஆல்பர்ட் திரையரங்கில் டிக்கெட் முன்பதிவு செய்ய திரண்ட கூட்டம்

    மேலும், டிக்கெட் முன்பதிவு செய்ய திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் களைகட்டுகிறது. அப்படி கூடும் ரசிகர்களுக்கு ‘கபாலி’ படத்தின் டிக்கெட்டுகள் எளிதில் கிடைப்பதில்லை. இணையதளங்களிலும் முன்பதிவு ஆரம்பமான, சில நிமிடங்களிலேயே முதல் மூன்று நாட்களுக்குண்டான டிக்கெட்டுகள் எல்லாம் தீர்ந்துவிட்டதாக காட்டுகிறது.

    இதுகுறித்து விசாரிக்கையில், சில திரையரங்கு நிர்வாகங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மொத்த மொத்தமாக ‘கபாலி’ டிக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சாதாரண ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டிக்கெட் முன்பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் திரையரங்கு நிர்வாகத்தினர் சரிவர பதிலளிப்பதில்லை. டிக்கெட்டுகள் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்துக்கூட எந்த தகவலையும் அளிப்பதில்லை. நிறைய ரசிகர்கள் டிக்கெட் இல்லை என்பது தெரியாமலேயே மணிக்கணக்கில் திரையரங்கு முன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    பி.வி.ஆர். திரையரங்கில் காத்திருக்கும் ரசிகர்கள்

    சில கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த விலை கொடுத்தாவது இப்படத்தின் டிக்கெட்டினை மொத்தமாக வாங்க தயாராக இருக்கின்றன. அப்படியிருக்கையில், அவர்களுக்கே திரையரங்குகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. முன்பதிவு செய்வதாக பெயரளவில் அறிவித்துவிட்டு, மொத்த மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த மாதிரி டிக்கெட்டுகளை திரையரங்கு நிர்வாகங்கள் வாரி இறைத்து வருகின்றன.

    தேவி கருமாரி திரையரங்கம் முன் ரசிகர்கள்

    சாதாரண ரசிகர்கள் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும்போது, ஒட்டுமொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    சிறு பட்ஜெட், சாதாரண நடிகர்களின் படங்கள் வெளிவரும்போதெல்லாம் இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்த டிக்கெட் வாங்க முண்டியடிப்பதில்லை. அப்போது அடிமட்ட ரசிகர்கள்தான் தியேட்டர்களின் வசூலில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். எனவே, எந்த படமாக இருந்தாலும் கவுண்டர்களில் ரசிகர்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அதேபோல் டிக்கெட் விற்பனையிலும் விதிமுறைகளை மீறாமல் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதே சாதாரண ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    Next Story
    ×