என் மலர்

    சினிமா

    லதாவிற்கு நடிப்பு, நடனத்தில் பயிற்சி பெற ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர்.
    X

    லதாவிற்கு நடிப்பு, நடனத்தில் பயிற்சி பெற ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதா நடிப்பது என்று முடிவானதும், அவருக்கு நடிப்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் வேண்டிய பயிற்சிகளை அளிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதா நடிப்பது என்று முடிவானதும், அவருக்கு நடிப்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் வேண்டிய பயிற்சிகளை அளிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

    நடிகர் மனோகர், லதாவின் வீடு தேடி வந்து அவரை நடிக்க அழைத்தார் அல்லவா?

    அதன்பின் நடந்தது பற்றி லதா கூறியதாவது:-

    "மனோகரின் அழைப்பு என் அம்மாவுக்கு திகைப்பையும், வியப்பையும் மட்டும் அல்ல, அதிர்ச்சியையும் அளித்தது. மவுனமாக இருந்தார். அப்போது மனோகர் கூறினார்:

    "என் நாடக நிகழ்ச்சிகளை படம் பிடிப்பவர்தான், உங்கள் மகள் நாட்டிய நிகழ்ச்சியையும் படம் எடுத்திருக்கிறார். எங்கள் நிகழ்ச்சி படங்களை பிரிண்ட் போட்டு எடுத்து வந்தபோது, அவர் கையில் உங்கள் மகளின் நடன போட்டோவும் இருந்தது. அதை வாங்கிப் பார்த்தேன். உங்கள் மகள் அழகாக இருந்தார்.

    சமீபத்தில் எம்.ஜி.ஆர். என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்து தான் எடுக்க இருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், கதாநாயகிகளில் ஒருவராகப் புதுமுகத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், தெரிந்த அழகான பெண் யாராவது இருந்தால் சொல்லும்படியும் கூறியிருந்தார். அது நினைவுக்கு வந்ததும், உங்கள் மகள் படத்தைக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன்.

    `நான் எடுக்கப்போகும் படத்துக்கு இந்தப் பெண் பொருத்தமாக இருப்பாள். எனவே, விவரத்தை சொல்லி அழைத்து வாருங்கள்' என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன் பேரில்தான் இங்கு வந்திருக்கிறேன்.''

    இவ்வாறு கூறிவிட்டு, என் தாயாரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார், மனோகர்.

    "என் பெண்ணை நடிக்க வைப்பதாக இல்லை'' என்றார் அம்மா, பிடிவாதமாக.

    மனோகரும் விடவில்லை. "உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், எம்.ஜி.ஆரிடம் நேரடியாக போய் சொல்லி விடுங்கள்'' என்றார்.

    அம்மாவுக்கும் அது சரியெனப்பட்டது. மறுப்பை, நேரில் சென்று நாகரீகமாக சொல்லி விடலாம் என்று முடிவு செய்தார்.

    இந்த இரண்டு நாட்களில் எனக்குள் ஒரு மாற்றம். `எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க எத்தனையோ பேர் விரும்பினாலும், அவர்களுக்கெல்லாம் அத்தனை சுலபத்தில் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. நமக்கோ வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இதை ஏன் விடவேண்டும்' என்று எனக்குள்ளாக கேட்டுக்கொண்டேன்.

    அம்மாவிடம் இதுபற்றி மூச்சு விடவில்லையே தவிர, பெரியம்மாவிடம் சொன்னேன். அவர் நடிகையாக இருந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு அத்தனை சுலபத்தில் யாருக்கும் தேடி வந்து விடாது என்பதை சட்டென புரிந்து கொண்டார். என்னை எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வைக்க அம்மாவிடம் பக்குவமாக பேசுவதாக சொன்னார்.

    மறுநாள் மதியம் மனோகர் வந்தார். `எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்' பட நிறுவனத்துக்கு காரில் அம்மாவையும், என்னையும் அழைத்துப்

    அங்கே போனபோது படப்பிடிப்பு முடிந்து ஆற்காடு சாலையில் உள்ள ஆபீசில் சாப்பிடப்போயிருக்கிறார் என்றார்கள். அங்கே போனால் டைரக்டர் ப.நீலகண்டன், அசோகன் ஆகியோருடன் தரையில் உட்கார்ந்தபடி எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மனோகர் சார் அவரிடம், எங்களை அறிமுகப்படுத்தினார். உடனே எம்.ஜி.ஆர், "முதலில் எல்லோரும் சாப்பிடுங்க'' என்றார்.

    நாங்கள் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டே போயிருந்தோம். அதைச் சொன்னதும், "அப்ப பாயசமாவது சாப்பிடுங்க'' என்று சொன்னவர், எங்களுக்கு பாயசம் தருவித்து கொடுத்தார்.

    சாப்பிட்டு முடித்து வந்ததும், ஏற்கனவே சந்தித்துப் பேசியதுபோல சகஜமாக பேசத்தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

    அவர் என் அம்மாவிடம், "உங்க ராஜபரம்பரை பற்றி எனக்குத் தெரியும். நான் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் உங்கள் கணவர் என் பக்கத்து பெட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உங்க பரம்பரைக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. எங்கள் ïனிட்டில் உங்கள் பெண்ணை கண்ணியத்துடன் நடத்துவார்கள்'' என்றார்.

    அம்மா யோசிப்பது தெரிந்தது. அந்த நேரத்தில் என் பக்கம் திரும்பிய எம்.ஜி.ஆர், "உன் விருப்பம் பற்றி எதுவும் சொல்லவில்லையே? வெளிப்படையாக சொல்லலாம்'' என்றார்.

    "எனக்கு விருப்பம்தான். ஆனால், நடிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாதே'' என்றேன்.

    "ஒரு நடிகைக்கு தேவை, சரியான முகபாவனைகள். ஏற்கனவே நடனம் கற்ற அனுபவம் இருப்பதால், உன்னால் கேரக்டருக்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    எனக்கு ஆண்டுப் பரீட்சை நடக்கவிருந்த நேரம் அது. படிக்கத் தயாராக வேண்டும். எனவே, நான், "பரீட்சையை முடித்துவிட்டு நடிக்க வரலாம் இல்லையா?'' என்று கேட்டேன்.

    "படப்பிடிப்புக்கு போய் வந்த பிறகு பரீட்சையை பிரைவேட்டாக எழுதிக்கொள்ளலாம்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    அதுவரை என் பெயர் "நளினி''தான். சினிமாவுக்காக "லதா'' என்று பெயர் சூட்டினார், எம்.ஜி.ஆர்.''

    இவ்வாறு லதா கூறினார்.

    எம்.ஜி.ஆர். படத்தின் கதாநாயகி லதா என்று முடிவானதும், மறுநாளே படப்பிடிப்பு தளத்துக்கு அவரை வரச்சொன்னார்கள். நடிப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக இது எம்.ஜி.ஆரின் ஏற்பாடு.

    எம்.ஜி.ஆர். நடித்த "ரிக்ஷாக்காரன்'' படம், அப்போது தயாரிப்பில் இருந்தது. தினமும் மஞ்சுளா நடிப்பதை சற்றுத் தொலைவில் நின்றபடி கவனிக்கலானார், லதா.

    இதற்கிடையே படப்பிடிப்பை மட்டும் பார்த்துவிட்டு போகிற மாதிரி இல்லாமல், சினிமா நடனங்களிலும் லதாவுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர். பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் சோப்ரா, புலிïர் சரோஜா, ரகுராம் ஆகியோர் லதாவுக்கு நடனப்பயிற்சி கொடுத்தார்கள்.

    சினிமா நடனத்திலும் லதா தேறிவிட்டார் என்று எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டதும், லதாவின் ஆட்டம் பார்க்க ஒரு நாள் செட்டுக்கு வந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். வந்த அன்று அவரைப் பார்த்ததும் லதாவால் இயல்பாக நடனமாட இயலவில்லை.

    "எம்.ஜி.ஆர். வந்து என் நடனம் பார்க்க விரும்பியதும் எனக்குள் உதறல். கால்களை கட்டி வைத்துக் கொண்டதுபோல் உணர்ந்தேன். நடனம் பார்த்து என்ன சொல்வாரோ என்ற பயம்தான். நான் அவரிடம், "உங்களை பார்த்ததும் எனக்கு ஆடவரலை'' என்றேன்.

    அவரோ, "அப்படியானால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா?'' என்று வேடிக்கையாக கேட்டார். பிறகு அவரே சகஜமாக பேசி, பயம் தெளிவித்து இயல்பாக நடனமாட வைத்தார்.''

    Next Story
    ×