என் மலர்

    சினிமா

    ரெயிலில் காணாமல் போன இளையராஜாவின் ஆர்மோனியம்
    X

    ரெயிலில் காணாமல் போன இளையராஜாவின் ஆர்மோனியம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கச்சேரிக்கு ரெயிலில் கோவில்பட்டி சென்றபோது, இளையராஜா மிகவும் நேசித்த ஆர்மோனியப்பெட்டி காணாமல் போய்விட்டது.

    கச்சேரிக்கு ரெயிலில் கோவில்பட்டி சென்றபோது, இளையராஜா மிகவும் நேசித்த ஆர்மோனியப்பெட்டி காணாமல் போய்விட்டது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நேரத்தில் மறுநாளே கோவில்பட்டியில் கச்சேரிக்காக புறப்பட்டோம். மதுரையில் இரவு 12-30 மணிக்கு ரெயில் வந்தது. நெல்லை எக்ஸ்பிரசோ, செங்கோட்டையோ ஞாபகம் இல்லை. எங்களை ரெயிலேற்றிவிட பாரதியும் வந்திருந்தார். ரெயில் புறப்படும் முன்பாக அவர் விடை பெற்றுச்சென்று விட்டார்.

    முந்தின நாட்களில் சரிவர தூங்காத அலுப்பு கண்களை செருக வைக்க, பெட்டி, படுக்கைகளை கீழே வைத்த நாங்கள் மேலே காலியாக இருந்த "பெர்த்''தில் ஏறி படுத்துவிட்டோம். சாதாரணமாக படுத்தவுடன் தூக்கம் வராத எங்களுக்கு முந்தின நாள் பொருட்காட்சியில் அலைந்த களைப்பில் படுத்ததும் தூக்கம் தூக்கிக்கொண்டு போனது. ரெயில் மதுரையில் அரை மணிக்கும் மேலாக நின்றது போலும். அதுதான் பிரச்சினையாகிவிட்டது.

    நாங்கள் ஏறிய ரெயிலில் கொடைக்கானல் போகவேண்டிய வெளி நாட்டுக்காரர் ஒருவர் அவரது மரப்பெட்டி ஒன்றை `கொடைக்கானல் ரோடு' ஸ்டேஷனில் இறங்கும்போது எடுக்க மறந்துவிட்டிருக்கிறார். இதனால் உடனடியாக மதுரை ஸ்டேஷன் மாஸ்டருக்கு போன் செய்து தெரியப்படுத்தி இருக்கிறார்.

    இதனால் அந்த மரப்பெட்டியைத் தேடிய ரெயில்வே ஊழியர்கள் நாங்கள் படுத்திருந்த பெட்டிக்கும் வந்திருக்கிறார்கள். எங்கள் கம்பார்ட்மென்டில் நான் ஆர்மோனியத்தை பூட்டி வைத்திருந்த மரப்பெட்டியை பார்த்து, அது அந்த வெள்ளைக்காரர் தவறவிட்ட பெட்டி என்று எண்ணிக்கொண்டார்கள்.இருந்தும் சிறு சந்தேகம். வேறு யாருடைய பெட்டி யாகவும் இருந்தால்?

    சந்தேகத்தை சரி செய்ய, உரத்த குரலில் "இந்த மரப்பெட்டி யாருது?'' என்று கேட்டிருக்கிறார்கள். நாங்கள்தான் அதற்குள் தூங்கிவிட்டோமே. அந்தக் குரல், எங்கள் தூக்கத்தை தாண்டி காதுகளை எட்டவே இல்லை. அவர்களும் பெட்டியில் பூட்டு இருந்ததால், திறந்து பார்க்க முற்படவில்லை. பெட்டியை இறக்கிவிட்டு, பெட்டி கிடைத்து விட்டது என்ற தகவலை ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். மறுநாள் காலை 6 மணிக்கு ரெயில் கோவில்பட்டி வந்தபோதுதான் அரக்கப் பறக்க விழித்தோம். வாத்தியங்களை இறக்கி வைக்க முற்பட்டபோதுதான், ஆர்மோனியம் காணாமல் போய்விட்டது தெரிந்தது. எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அடிவயிற்றை ஏதோ கவ்வியது போன்ற உணர்வு.

    இப்போது ஆர்மோனியம் பற்றி கொஞ்சம் விளக்கவேண்டும். ஒவ்வொரு ஆர்மோனியமும் வெவ்வேறு அமைப்பில் இருக்கும். பெட்டிக் கட்டைகளில் ஆக்ஷனுக்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பிகளின் டென்ஷன், `கட்டை'யை அழுத்தியவுடன் அது கீழே இறங்கும் அளவு, அதிலிருந்து புறப்பட்டு வரும் நாதம் எல்லாமே பெட்டிக்கு பெட்டி மாறுபடும்.

    இங்கே கச்சேரிக்கென எனக்குத்தரப்பட்ட ஆர்மோனியத்தை வாசித்துப் பார்த்தேன். திருப்தியில்லை. இருந்தாலும் வேறு வழி? ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டேன். ஆனால் என்னுடைய ஆர்மோனியம், `இந்தக்கால கட்டத்தில் இவன் என்னை வாசிக்கக்கூடாது' என்று முடிவு செய்து பிரிந்துபோய் விட்டபிறகு, நான் என்ன செய்ய முடியும்? இந்த சோகத்துடன் இன்னொரு சோகமும் சேர்ந்தே வந்தது.

    கோவில்பட்டியில் ஒரு வார கச்சேரிக்கு அண்ணன் ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் ரெயிலில் கோவில்பட்டி போய்ச்சேர, பண்ணைபுரத்தில் இருந்து அண்ணன் பஸ் ரூட்டில் வந்து எங்களுடன் கோவில்பட்டி கச்சேரியில் கலந்து கொள்வதாக ஏற்பாடு. நாங்கள் கோவில்பட்டிக்கு வந்துவிட்டோம். இப்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. மாலையில் கச்சேரி. பாவலரோ வரவில்லை. சரி, மாலையில் எப்படியும் அண்ணன் வந்து விடுவார் என்று உள்ளூர் கம்யூனிஸ்டு தோழர்களை சமாதானப்படுத்தினோம்.

    கட்சியின் செயலாளருக்கு விஷயம் போயிற்று. அவர் யதார்த்தவாதி. பாவலர் வரவில்லை என்பதை கூட்டத்தில் சொல்ல முடியாது. அதே நேரம் பாவலரை அதுவரை அந்த ஊர் மக்கள் பார்த்ததில்லை. இந்த விஷயத்தை மனதில் கணநேரம் கூட்டிக்கழித்தவர், பாஸ்கரை அழைத்தார். "பாவலர் என்று சொல்லி நீங்களே கச்சேரியை நடத்திவிட முடியுமா?'' என்று கேட்டார். எங்களுக்கு அதிர்ச்சி. நாங்களாக கச்சேரியை நடத்திவிட முயன்று பார்க்கலாம். ஆனால் பாவலராக நடிப்பதாவது? சினிமாவை விடத் தமாஷாக இருக்கிறதே? சரி, பாவலராக பாஸ்கர் நடிக்கட்டும். அப்படியானால் பாஸ்கராக நடிப்பது யார், நானா?

    அண்ணன் பாவலரோடு பாட்டுக்கு இடையே காமெடியாக பாஸ்கர் சில கேள்விகள் கேட்பது வழக்கம். அதற்கு அண்ணனின் பதில்கள் மக்களிடம் கைதட்டல் பெறும். இப்போது பாஸ்கர் இடத்தில் நான் இருந்து கொண்டு, பாவலராக பாஸ்கரை கருதிக்கொண்டு கேள்விகள் கேட்கவேண்டும். கச்சேரியில் அத்தனை பாடல்களும், உரையாடல்களும் எங்களுக்கு மனப்பாடம். எதை, எப்படி ஏற்றி, இறக்கிப் பேசவேண்டும் என்பதும் அத்துப்படியான பாடம். என்றாலும் மாலை வரையில் அண்ணன் பாவலர் வந்து விடமாட்டாரா என்ற ஒரு கவலை ஓடிக்கொண்டிருந்தது. எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது.

    மாறுவேடம் புனைந்து நாங்கள் நடித்தாக வேண்டும் என்றிருக்கும்போது, அண்ணன் எப்படி வருவார்? வரவேயில்லை. கோவில்பட்டியில் இருந்து ஒரு வாடகைக்காரில் நானும் பாஸ்கரும் சென்றோம். கூடவே கட்சித்தோழர் ஒருவரும் வந்தார். சூரங்குடி என்ற கிராமத்தில் முதல் நாள் நிகழ்ச்சி. அன்றைக்கென்று பார்த்து எந்த ஊரிலும் நாங்கள் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்ச்சி நடந்தது.

    அந்த ஊரிக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். அங்கிருந்து பாவலருக்கு வரவேற்பு அளித்து மேடை அமைக்கப்பட்ட மைதானம் வரை கிராமத்தெருக்களில் ஊர்வலமாகப் போய் கூட்டம். அதைத்தொடர்ந்து கச்சேரி. மைதானம் வந்ததும் காரைவிட்டு இறங்கினோம். எங்களைப் பார்த்ததும் "பாவலர் வரதராஜன்'' என்று  ஒருவர் உரத்த குரலாய் ஒலிக்க, மக்கள் "வாழ்க'' என்று கோஷம் போட்டார்கள்.
    Next Story
    ×