என் மலர்

    சினிமா

    கதாநாயகி, வில்லி, நகைச்சுவை வேடங்களில் நடித்த சுந்தரிபாய்
    X

    கதாநாயகி, வில்லி, நகைச்சுவை வேடங்களில் நடித்த சுந்தரிபாய்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.
    நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.

    சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1927-ல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். அப்போது, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "சிந்தாமணி'' படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சுந்தரிபாய்க்கு மனப்பாடம். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.

    இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர்.

    உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக, 1937-ல் "சுகுணசரசா'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் சம்பளத்தில், மூன்று நாட்கள் நடித்தார்.

    இதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார். இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.

    ஜெமினியின் முதல் படமான "மதனகாமராஜன்'' படத்தில், கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத்தொடர்ந்து, காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.

    இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    "இது காதல் திருமணம் மட்டுமல்ல. கலப்பு திருமணமும்கூட. என் தாய் மொழி மராத்தி. அவர் தமிழர்.

    இதன்பின், ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.

    1945-ல் ஜெமினி தயாரித்த "கண்ணம்மா என் காதலி'' என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.''

    இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.

    1948-ல் ஜெமினியின் பிரமாண்டமான படமான "சந்திரலேகா'' வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

    கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, "இச்சைகளைத் தீர்க்கும் பச்சை மலைப்பாவை''யாக மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார்.

    சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பளம் 150 ரூபாய். சந்திரலேகாவில் நடித்தபோது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.

    ஜெமினியின் வெற்றிப்படமான "சம்சார''த்தில், வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

    "வள்ளியின் செல்வன்'' படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.

    கே.பாலசந்தர் தயாரித்த "அரங்கேற்றம்'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

    300 படங்கள்

    சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300. சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய், அண்மையில் காலமானார்.
    Next Story
    ×