நடிகை மம்தா மோகன்தாசுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
நடிகை மம்தா மோகன்தாசுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
சென்னை, ஏப். 26-

விஷால் ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மம்தாமோகன்தாசுக்கு ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றார்.

நிச்சயம் நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவேன் என்றார். அவர் சொன்னது போலவே பூரண குணம் அடைந்தார். திருமணமும் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தமிழில் அருண்விஜய் ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் மம்தா மோகன்தாசுக்கு தற்போது மீண்டும் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. கடந்த 6 மாதங்களாக படங்களிலும் அவர் நடிக்க வில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரசிகர் ஒருவர் டுவிட்டர் மூலம் மம்தாவிடம் தொடர்பு கொண்டு உடல் நிலை குறித்து கேட்ட போது ஏற்கனவே நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டேன்.

இப்போது மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறேன். இதில் இருந்து விரைவில் குணமாவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் சினிமா செய்திகள்