கடும் உடற்பயிற்சியில் அஜீத்குமார் : புது படத்துக்காக உடம்பை மெருகேற்றுகிறார்
கடும் உடற்பயிற்சியில் அஜீத்குமார்
: புது படத்துக்காக உடம்பை மெருகேற்றுகிறார்
சென்னை, ஜன 25-

அஜீத் 'பில்லா-2'க்கு பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் பிசியாகி உள்ளார். இப்படத்துக்கு வலை என பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது.

சமீபத்தில் இப்படத்துக்காக சண்டை காட்சியொன்றில் நடித்தபோது விபத்து ஏற்பட்டு அஜீத் படுகாயம் அடைந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத் தீவிர சிகிச்சை பெற்றார். தற்போது அவர் பூரண குணமாகியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் படத்தில் நடிக்க தயாராகிறார். இதற்காக சில தினங்களாக கடும் உடற்பயிற்சி செய்து உடம்பை மெருகேற்றி வருகிறார். இளம் பயிற்சியாளர் சிவா பயிற்சி அளித்து வருகிறார். பெரும் பகுதி நேரத்தை அஜீத் உடற்பயிற்சி கூடத்திலேயே கழிக்கிறார். தற்போது உருண்டு திரண்ட உடல்வாகுடன் கம்பீரமான தோற்றத்துக்கு மாறியுள்ளார். அடுத்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடிக்க தயாராகிறார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif

மேலும் சினிமா செய்திகள்