குத்துப்பாடல்களைவிட கானா, கிராமிய பாடல்கள் சிறந்தவை: இசையமைப்பாளர் இமான்
குத்துப்பாடல்களைவிட கானா, கிராமிய பாடல்கள் சிறந்தவை: இசையமைப்பாளர் இமான்
இசையமைப்பாளர் டி.இமான் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

விஜய் நடிக்கும் 'ஜில்லா', விமல் நடிக்கும் 'தேசிங்குராஜா' படங்களுக்கு இசையமைக்கிறேன். விக்ரம் பிரபு, கார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் படங்களுக்கும் இசையமைக்கிறேன். நடிப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை. இசையில்தான் முழு கவனமும் இருக்கிறது. இசை வீடியோவில் வேண்டுமானால் தலைகாட்டுவேன்.

இசையமைக்க ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இசையமைப்பாளர்கள் செல்வது அவரவர் விருப்பம். எனக்கு வீட்டில் வைத்து இசையமைக்கத்தான் பிடிக்கும். குத்துப்பாடல்கள் குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பெல்லாம் ஐந்து பாடல்களில் நான்கு பாடல்கள் குத்துப்பாடலாக இருக்கும். ‘மெலடி’ பாடல் கேட்டு கெஞ்சுவோம். அந்த நிலைமை தற்போது மாறுகிறது. மெலடி பாடல்கள் நிறைய வருகின்றன. குத்துப் பாடல்களைவிட கானா மற்றும் கிராமிய பாடல்கள் ரசிக்க தகுந்தவை.

‘சொய்ங்’ பாடல் கிராமிய பாடலாக இருந்தாலும் குத்துப்பாட்டுக்கு உள்ள வேகம் இருந்தது. இதுபோல் குத்துப்பாடல்களில் மாற்றம் ஏற்படவேண்டும். இயக்குனர்களின் இசை ரசனையும் முக்கியம். கதையே இசையை தீர்மானிக்கின்றன. இன்டர்நெட்டில் எனது பெயரில் புதிய இணையதளம் துவங்கியுள்ளேன். என் பாடல்கள், என்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் அதில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் சினிமா செய்திகள்