கவுதம் மேனன் இயக்கத்தில் ‘தல’ அஜீத்
கவுதம் மேனன் இயக்கத்தில் ‘தல’ அஜீத்
‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து கவுதம்மேனன் அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறாராம். அஜீத்தும் கவுதம் மேனனும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைகிறார்கள். பலமுறை இருவரும் இணைந்து படம் பண்ணப் போகிறார்கள் என்ற செய்தி தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர். இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு 2014-ம் ஆண்டு கவுதம் மேனனுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவுதம்மேனன் விஜய்யை வைத்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்ற படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால், அப்படத்தை தற்போது கைவிட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சினிமா செய்திகள்