பெற்றோர் வளர்ப்பில் நடிகையின் காதல்!
பொன்வசந்த நாயகி மேடையிலேயே தான் காதலிப்பதாகவும், தனக்கு காதலர் ஒருவர் இருப்பதாகவும் மனம் விட்டு சொல்லிவிட்டார். இருப்பினும் பலருக்கும் அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால், இவருக்கு உண்மையிலேயே காதலர் ஒருவர் இருக்கிறாராம். அவர் சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவராம்.  இவர் சினிமாவுக்குள் வந்தபிறகுதான் அவரை சந்தித்தாராம். இப்பொழுதும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கின்றனராம். ஆனால், சினிமா வட்டாரங்களுக்குள் தன் காதலரை அனுமதிப்பதில்லையாம்.

இந்த காதல் விவகாரம் நாயகியின் பெற்றோருக்கும் தெரியுமாம். அவர்களும் தங்களது மகளின் காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனராம்.