அனிருத் இசையமைத்த ‘எதிர்நீச்சல்’ படத்தின் 6 பாடல்கள் இம்மாதம் இறுதியில் வெளியீடு
அனிருத் இசையமைத்த ‘எதிர்நீச்சல்’ படத்தின் 6 பாடல்கள் இம்மாதம் இறுதியில் வெளியீடு
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் அனிருத்.

இவர் தற்போது ‘எதிர்நீச்சல்’ என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணிபுரிந்த செந்தில் இயக்குகிறார். ஒளிப்பதிவை தேசிய விருது பெற்ற வேல்ராஜ் கவனிக்கிறார்.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை இம்மாதம் இறுதியில் வெளியிட முடிவு செய்திருக்கின்றர். இதில் 2 பாடல்களை தனுஷ் பாடியுள்ளார். மேலும் ஹிப் ஹாப் தமிழா குழுவினர் ஒரு பாடலும், அனிருத், ஸ்ரேயா கோசல் இணைந்து ஒரு பாடலும் பாடியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஏற்கெனவே ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது படமாகும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"