தோஷம் விலக வேண்டுமா?
தோஷம் விலக வேண்டுமா?

 
வைகாசி மாதம் பவுர்ணமியும் விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக்கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமயம் இவற்றைச் சிரசில் தெளித்துக்கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேக அர்ச்சனை செய்து, பின் தான தர்மங்களைச் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இத்தலம் ராமநாதபுரம் பரமக்குடி நெடுஞ்சாலையில் உள்ளது.

நம்மாழ்வார் அவதார நாளும் வைகாசி விசாகமாகும். எமனுக்குரிய நாளும் இதுவே. வைகாசி விசாகமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாளில் எமன் பன்மடங்கு உகப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராமராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

புத்தர்பிரான் பிறந்த இதே வைகாசி மாத விசாக நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் அதோடு மட்டுமல்லாமல் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் இதே நாள். அவர் முக்தியடைந்த நாளும் இதுவேயாகும். இக்காரணத்தால் இந்நாளைப் புத்த பூர்ணிமா என்று சிறப்பித்து வணங்கி வழிபடுகிறார்கள்.

மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பெயர் பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத "அமுத சுரபி'' என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும்.

உலக மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது, இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

ராஜஸ்தான்  மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைஷாக பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது.

இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif